அழகிரி வாழ்த்து; இனிப்பு வழங்கிய ஆதரவாளர்கள்!

Published:

madurai chozhavanthan
madurai chozhavanthan

திமுக தலைவர் தமிழக  முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு முக அழகிரி வாழ்த்து… தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சோழவந்தான் மே 7 மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல் புளிச்சான்பட்டி கிராமத்தில் அஞ்சாநெஞ்சன் அழகிரி பேரவை சார்பாக பால்பாண்டி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை யொட்டியும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதை யொட்டியும் நேற்று முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளரும் மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான முக அழகிரி வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கள்புளிச்சான்பட்டி  கிராமத்தில் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இருவரும் இணைந்து செயல்பட்டு எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img