11/07/2020 4:40 AM
29 C
Chennai

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: தனுசு

இதோ இந்த குரு பெயர்ச்சி, தனுசு ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, தனுசு ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

dhanusu rasi குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: தனுசு
தனூர் ராசி

மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய

45/100

உதார குணம் கொண்ட தனுர்ராசி அன்பர்களே!

உங்களது ராசிநாதன் குருபகவான் 12ல் சஞ்சரித்து சுப நிகழ்ச்சிகளை தந்தவர் தற்பொழுது ஜென்ம ராசிக்கு வருகிறார் மேலும் சனிபகவான் ஜென்மத்தில் இருக்கிறார் மேலும் கேது ஜென்மத்திலும் இருப்பதால் பொதுவாக இந்த வருடம் உங்களுக்கு மிகுந்த சிரமமான வருடம் ஆகிவிடும்.

தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஓரளவு நன்றாக இருக்கும். பொருளாதாரம் கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும் . மற்ற கிரஹ நிலைகள் சாதகம் இல்லை ஆதலால் எதிலும் நிதானமாக இருத்தல் அவசியம்,

குருவின் பார்வை 5ம் 9ம் இடங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் கலவையாக நல்லதும் கெட்டதும் நடக்கும். முடிவுகளை எடுக்கும் போது ரொம்ப நிதானமாக யோசித்து எடுக்கவேண்டும்,

சனி பகவான் ஜனவரி 23,2020ல் மகரசாசிக்கு பெயர்ந்தாலும் ஏழரையில் இன்னும் 2.5 சனி இன்னும் பாக்கி இருக்கிறது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் நிதானம் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம் :

ஏழரை சனி மட்டுமல்லாது ஜென்ம கேதுவும் மன அழுத்தம், தேவையில்லாத உடல் சீர்கேடுகள் அல்லது குடும்ப உறவுகளின் உடல் நல கோளாறுகள் என்று மருத்துவ செலவை அதிகரிக்கும், மருத்துவரின் ஆலோசனையை அப்படியே பின்பற்றுவது தான் மிக சிறந்த பரிகாரம், உணவுக்கட்டுப்பாடு, தியானப்பயிற்சிகள் இறை நம்பிக்கை போன்றவை உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

குடும்பத்தில் சதா ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்குள் கசப்பான வேற்றுமைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். பிள்ளைகளும்/பெற்றோர்களும் சொல்படி நடக்கமாட்டார்கள் உறவினர்களுடன் பிரிவும் சண்டையும் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, மன அழுத்தம் அதிகரிக்கும் எதிலும் ஒரு நிதானம் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகத்தில் மந்த நிலை ஏற்படும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பது துர்லபம். அலைச்சல் அதிகம் இருக்கும். கடன் தொல்லையாலும் தனிப்பட்ட பிரச்சனையாலும் அதிக துன்பத்தை உத்தியோகத்தில் அனுபவிப்பீர்கள். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.

தொழிலதிபர்கள்/வியாபாரிகள் :

கூட்டு தொழில் சிரமத்தை கொடுக்கும். தொழிலில் அதிக தொல்லைகள் இடையூறுகள் இருக்கும். எதிர்பாரா செலவுகள் வரும். தொழிலாளர்களால் பிரச்சனை உண்டாகும். மேலும் அரசாங்க வகையில் இடையூறு இருக்கும் கடன் சுமை அதிகரிக்கும் புதிய தொழில் முயற்சிகள் தள்ளி போகும். மந்த நிலை ஏற்படும். விரயம் அதிகம் ஆகும்.

கலைஞர்கள் :

வாய்ப்புகள் தட்டி போகலாம், சககலைஞர்களால் பணம் விரயம் ஆகும், புகழ் ரசிகர் ஆதரவு குறையும், பண வரவு சுமாராக இருக்கும், எதிர்பார்த்த இனங்களில் வருவாய் இருக்காது கொஞ்சம் சிரமப்பட்டே வாய்ப்புகள் பெறுவீர்கள் அதிலும் பணம் குறைவாக கிடைக்கும்.

அரசியல்வாதிகள் :

கட்சி மேலிடத்தில் ஆதரவு இருக்காது, தொண்டர்களை சமாளிக்க அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். எதிரிகள் சமயம்பார்த்து கொண்டிருப்பர் வழக்குகளை சந்திக்க நேரிடும் அலைச்சல் அதிகம் இருக்கும் பண விரயம் அதிகம் ஆகும்.

விவசாயிகள் :  

மகசூல் குறைவு ஏற்படும் கால்நடைகளால் பண இழப்பு ஏற்படும் மருத்துவ செலவு இருக்கும், புதிய நிலம் வாங்கும் எண்ணம் தள்ளி போகும், வருகின்ற வருமானம் அப்படியே செலவு ஆகும். வழக்குகளில் மந்த நிலை இருக்கும். முன்னேற்றம் இருக்காது. புதிய சாகுபடிகளை செய்வது கடினம் ஆகும்.

மாணவர்கள்:

படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு சுமார்தான். ஆசிரியரின் அறிவுரை நல்ல பலனை தரும். மேல்படிப்புக்கு சிலர் வெளிநாடு செல்ல முயற்சித்தால் தாமதம் ஆகும் எதிலும் கவனமும் நிதானமும் தேவை

பெண்கள் :

குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றிக்கொண்டே இருக்கும், ஒற்றுமை குறையும் விட்டுக்கொடுத்து போவது நல்லது, கணவரை அனுசரித்து போகவேண்டும். பிள்ளைகளால் விரயம் உண்டாகும். பொருள் களவு போவது அல்லது காணாமல் போவது என்று இருக்கும். பண பிரச்சனை இருந்து கொண்டிருக்கும். உழைக்கும் மகளிருக்கு அதிக ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பது துர்லபம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சொந்த தொழில் செய்வோர் கவனமாய் இருத்தல் நலம், எதிரி தொல்லை அதிகரித்து வியாபாரத்தை மந்தமாக்கும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும்  :

விநாயகரைக் கும்பிடுவது நலம். கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். விநாயகர் அகவல் சொல்லுங்கள், திங்கள் கிழமைகளில் சிவனுக்கு நெய்தீபம் ஏற்றுங்கள். பசு பக்ஷி போன்றவற்றுக்கு உணவிடுங்கள். ஏழை எளியோருக்கு முடிந்த சரீர உதவி பொருளாதார உதவிகளை செய்வதும் நன்மை பயக்கும். அன்னதானம் செய்யுங்கள்.

lakshmi narasimhachari குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: தனுசு

பின் தொடர்க

17,864FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை