குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


விருச்சிக ராசி :

விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய

40/100

தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் விருச்சிகராசி அன்பர்களே!

குருபகவான் ஜென்மத்தில் வருகிறார் இது நல்லதல்ல. மேலும் சனி இரண்டில் பெரிய தொந்தரவுகளை தந்து கொண்டிருப்பார் வாயில் வார்த்தை தேளாக கொட்டி அடுத்தவரை காயப்படுத்தும் அதனால் குடும்பத்தில் நிம்மதி கெடும்

இதுவரை ஓரளவு நன்மை தந்த கேது செவ்வாய் இனி அவ்வளவு நன்மை தராது, நிதி நெருக்கடி ஏற்படும். பிப்ரவரி 2019ல் 8ல் வரும் ராகுவும் 2ல் வரும் கேதுவும் மேலும் சோதனைகளை தந்து கொண்டிருக்கும். பொதுவாக எந்த ஒரு கிரஹமும் சாதகம் இல்லாத நிலை உங்கள் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஒழிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அவ்வளவு சாதகம் இல்லை

எந்த ஒரு முடிவும் இந்த வருடம் முழுவதும் எடுக்க வேண்டாம். அப்படி எடுக்க வேண்டும் எனில் உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி தசாபுக்தி மற்றும் கிரஹ சாதக நிலையை அறிந்து கொண்டு எடுக்கவும். நாவடக்கமும் பொறுமையும் மிகுந்த நன்மையை தரும்.

உடல் ஆரோக்கியம் : ஜென்ம குருவும் பிப்ரவரியில் 8ல் வரும் ராகுவும் அதிக ஆரோக்கிய பாதிப்பைச் செய்வர், உடம்பின் சக்தி குறைந்து கொழுப்பு மிக உயரலாம், சிலருக்கு நண்பர்கள் சேர்க்கையால் தீய பழக்கங்கள் ஏற்படலாம் அதனால் உடல் பாதிப்பு ஏற்படலாம், மேலும் சனியால் பெற்றோர் மனைவி/கணவர் குடும்பத்தார் உடல் நிலையும் பாதிக்க படலாம். நல்ல ஆகாட்ரங்களை உட்கொள்ளல் , தியானப்பயிற்சி போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைத்திய செலவுகள் அதிகரிக்கும். அதிக அக்கறை எடுத்து கொள்வது நலம் தரும்.

குடும்பம் மற்றும் உறவுகள் : ஜென்ம குரு உங்கள் குடும்பத்தில் பல காரணங்களுக்காக பிரிவை ஏற்படுத்தலாம் மனைவி/கணவர் ஒற்றுமை குறையலாம் வீண் விவாதங்கள் பெருகலாம், மனைவி/கணவர் உறவினர்கள், சகோதர வகை , குழந்தைகள் என்று எவரோடும் நல்ல நிலை இருக்காது அவசரம் ஆத்திரம் வார்த்தைகளிய கொட்டுதல் போன்றவற்றால் அதிக துக்கம் ஏற்படலாம், பிள்ளைகள் மூலம் அதிர்ச்சியான தகவல்கள் வரலாம். குழந்தைகளுக்கும் சிரமமான நிலை உண்டாகி அதை பார்த்து வேதனை பட நேரிடும். வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சனி பகவானும் சேர்ந்து துன்பத்தை தருவார் பகவானை இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்கள்: அதிகம் உழைக்க வேண்டி இருக்கும் மேலதிகாரிகளோடு விவாதம் வேண்டாம் சிலருக்கு வேலை இழப்பும் இருக்கும். வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. விரும்பாத இடமாற்றம் இருக்கலாம். சக பணியாளரை நம்பி வேலையை ஒப்படைத்தால் துன்பத்துக்கு ஆளாகலாம். குரு பார்வை ஓரளவு பிரச்சனையை தீர்க்கும். அக்டோபர் 2019 வரை பொறுமையாக வேலை பார்க்க வேண்டும். எதிரிகள் அதிகம் இருப்பர்.

தொழிலதிபர்கள்/வியாபாரிகள் : மந்த நிலை இருக்கும் கூட்டு தொழிலில் சிரமம் இருக்கும். இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிப்ரவரி-ஏப்ரல் காலகட்டத்தில் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வதும், பண விஷயத்தில் கவனமாக இருத்தலும் நலம் தரும். பொதுவாக போட்டிகள் இருந்தாலும், உடன் இருப்பவரால் துன்பம் இருப்பதால் எதிலும் கவனமாய் இருத்தல் நல்லது.

கலைஞர்கள் : விடாமுயற்சியால் ஒப்பந்தங்கள் கிடைக்கும், அலைச்சல் அதிகம் இருக்கும். புகழ் பாராட்டு கிடைப்பது சிரமம். பணப்புழக்கம் சுமார் கடன் வாங்குவது தவிர்க்க இயலாது. கொஞ்சம் சிரமமான காலம். நிதானமாக யோசித்து செயல்படுவது நலம் தரும்.

அரசியல்வாதிகள் : ஓரளவு நல்ல பெயர் இருக்கும் விடாமுயற்சியால் பதவி கிட்டும். மேலிடம் அனுகூலமாக இருக்கும். இருந்தாலும் பண செலவு அதிகரிக்கும் சிக்கனம் தேவை. அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சமூகத்தில் மதிப்பு குறையாது.

விவசாயிகள் : மாற்றுப்பயிர்கள் மூலம் வருமானம் பெறுவர், வருமானத்துக்குக் குறைவு இருக்காது. அக்கம்பக்கத்தாரோடு வீண் விவாதம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். இருக்கும் வழக்குகள் சுமாரான நிலை இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் தாமதமாகும்.

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை வேண்டும். ஆசிரியர் வழிகாட்டுதல் படி நடப்பது நல்லது. போட்டிபந்தயங்களில் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை இருக்கும். வெளி நாட்டுப்படிப்பு கடும் முயற்சிக்கு பின்னே ஈடேறும் அதிகம் உழைத்தால் மட்டுமே படிப்பில் நல்ல மதிப்பெண் பெறலாம்.

பெண்கள் : அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் அக்கம்பக்கத்தாரோடு அனுசரித்து போவது நல்லது. பெரிய இடர்கள் வராது எனினும் சிறு சிறு உபாதைகள்  உடல்ரீதியான படுத்தல்கள் போன்று இருக்கும். மனோதைரியத்தால் சமாளித்துவிடுவீர்கள். உழைக்கும் மகளிருக்கு அதிக முயற்சி மட்டுமே பலன் தரும் பதவி உயர்வு சம்பள உயர்வு என்பது விடாமுயர்ச்சியினால் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ஓம் நமசிவாய என்று சொல்லி கொண்டே இருங்கள். சிவாஷ்டகம் லிங்காஷ்டகம் போன்று சொல்வதும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடும் நலம் தரும். அருகில் உள்ள சிவன் கோவிலில் திங்கள் கிழமைகளில் பால் வாங்கி அபிஷேகத்துக்கு தருவது நலம் தரும். முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள்.


குரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM


-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Loading...