குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: துலாம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, துலா ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, துலா ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

thulam rasi குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: துலாம்
துலா ராசி

சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 3 பாதம் முடிய

60/100

குடும்பத்தைக் காப்பவராயும் தன்னுடைய நிலையிலிருந்து மாறாதவராயும் இருக்கும் துலா ராசி அன்பர்களே!

இதுவரை 2ல் குருவும், 3ல் சனி கேதுவும் இருந்து வாழ்க்கையில் சில முன்னேற்ற பாதையை கடந்து வந்து இருப்பீர்கள் சகல வசதிகளும் நிறைந்திருக்கும். ஆனால் குருபகவான் தற்போது 3ம் இடத்துக்கு செல்வது பெரிய நற்பலனை ஏதும் தராது. ஆனால் 7ம் இடத்தையும் , 9ம் இடத்தையும் 11ம் இடத்தையும் பார்ப்பதால் நன்மைகள் உண்டாகும்.

சனி ஜனவரி 23,2020ல் 4ம் இடத்துக்கு பெயர்ந்தாலும் பெரிய கஷ்டங்கள் ஏதும் வராது. இனி உங்கள் குடும்பத்தேவையை கவனிக்க வேண்டும். எதிலும் கவனமாக இருந்தால் சட்ட சிக்கல்கள் வராது. அர்த்தாஷ்டம சனி மன அழுத்தம், வேலையில் ப்ரஷர், நண்பர்களால் உறவுகளால் தொல்லை என்று கொடுத்து கொண்டு இருந்தாலும், சனியின் பார்வை படும் 6ம் இடம், எதிரிகளை, வியாதிகளை, கடன் தொல்லைகளை விரட்டி அடித்துவிடும் என்பதும் உறுதி,

பொதுவாக பொருளாதார ரீதியில் கொஞ்சம் குறைவான முன்னேற்றம் இருந்தாலும் உங்கள் உறுதியான மனம் எதையும் எதிர் கொண்டு சமாளித்துவிடும்.

உடல் ஆரோக்கியம் :

அர்த்தாஷ்டம சனி காலங்களில் கொஞ்சம் உடல் ஆரோக்கிய பாதிப்புகள், குடும்ப உறவுகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு வைத்திய செலவுகள் வைத்து கொண்டிருக்கும். குரு பெயர்ச்சி பெரிய ஆரோக்கிய பாதிப்புகளை உண்டாக்காது. மன அழுத்தம், தைரிய குறைவு, வேலையில் ப்ரஷர் என்றும் கவன சிதறல்களையும் கொடுக்கும். சரியான தியான பயிற்சி வைத்திய ஆலோசனை படி நடத்தல் ஆகார பயிற்சி, இவை உடல் ஆரோக்கியத்தை சீராக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

குருவின் பார்வை 7ம் இடத்துக்கு படுவதால் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும், நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள், மனம் அவ்வப்போது சஞ்சலம் அடைந்தாலும் பாக்கியத்தை குரு பார்ப்பதால் ஆறுதலான விஷயங்கள் நடக்கும். பிள்ளைகள் பெருமை தருவர், குடும்ப நலனில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள், உறவினர்களால் சகோதர வகையால் சில லாபங்களையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் :

வேலையில் அழுத்தம் அதிகம் இருந்தாலும், குருவின் லாப பார்வையும், 9ம் இடத்தின் பார்வையும் ஓரளவு நன்மைகளை செய்திடும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு, மேலதிகாரிகளுடன் இணக்கமான உறவு, புதிய உத்தியோகம் கிடைத்தல் என்று நன்றாகவே இருக்கும். அர்த்தாஷ்டம சனி காலமும் வருவதால் அதிக கவனம் செலுத்தி ஊழியம் செய்ய வேண்டி இருக்கும், வீண் விவாதங்களை தவிர்ப்பதும், ரகசியங்களை பாதுகாப்பதும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை தடுக்கும் நபர்களை இனம் கண்டு கொள்ள செய்வதும் நல்லது.

தொழிலதிபர்கள் / வியாபாரிகள்:

குரு பகவான் ராசிக்கு 3ல் பெயர்வதும், ஜனவரி 23ம் தேதி வரை சனி, கேதுவுடன் சஞ்சரிப்பதும், கடந்த காலத்தில் இருந்த நல்ல சூழலை பாதிக்க செய்யும், தொழிலாளர்களால் பாதிப்பும் கூட்டுத்தொழிலில் மந்த நிலையும், கூட்டாளிகளுக்குள் பிரிவும், வழக்குகள் சட்ட சிக்கல்கள் என்றும் பண விரயம், மன அழுத்தம் இவை உண்டாக கூடியதாய் இருக்கும். இருந்தாலும் குருவின் 9ம் பார்வை லாபத்தை பார்ப்பதால் நஷ்டம் என்பது பாதிப்பை தராது. புதிய விஸ்தரிப்பு போன்ற சிந்தனை தற்போது வேண்டாம், புதிய தொழில் ஆரம்பிப்பதையும் ஏப்ரல்,மே,ஜூன் 2020களில் தொடங்கலாம், இந்த மூன்று மாதம் நன்றாக இருக்கும். வளர்ச்சி உண்டாகும். கணக்குவழக்குகளை சரியாக வைத்திருக்கவும். அரசு உதவி சிரமம்.

கலைஞர்கள் :

சுக்ரனின் வக்ர காலம் கொஞ்சம் சிரமம் கொடுத்தாலும் கடும் முயற்சியில் சில வாய்புகளை பெறலாம். பணத்தை சேமிப்பது அவசியம், நண்பர்கள் சேர்க்கையை ஒழுங்கு படுத்துவதும், வீண் செலவுகளை தவிர்ப்பதுவும் நல்லது. புகழ் பாராட்டு கிடைப்பது அரிது. வருகின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் அது உதவும்.

அரசியல்வாதிகள் :

எதிரிகள் அருகில் இருந்து கெடுப்பார்கள், மௌனமாக செல்வது நல்லது, மேலிட ஆலோசனை படி நடப்பது நன்மை தரும், தொண்டர்களை தக்க வைக்க அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும், ஏப்ரல்,மே,ஜூன் மாதங்கள் மகிழ்ச்சியை தரும், பதவியை கொண்டு வரும் பண புழக்கம் தாராளமாகும், வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்.

விவசாயிகள் :

ஓரளவு வருமானம் அதிகரிக்கும். மானாவாரி பயிர்கள், மற்றும் கால்நடைகளால் நன்மை உண்டாகும், புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஏப்ரல்,மே,ஜூனில் நிறைவேறும், வழக்குகளில் ஓரளவு சாதக நிலை உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும், வீடுவாங்கும் நிலை உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி ஓரளவு நன்மையை தரும்.

மாணவர் :

புதன் சஞ்சாரமும், குருவின் பார்வையும் நன்றாக இருப்பதால் படிப்பில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு படிப்பு எண்ணம் ஈடேறும், ஆசிரியர் நன்மதிப்பை பெறுவர், பெற்றோர்களின் ஆதரவு உண்டு, போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டகும், கல்வியால் வளம் பெறுவர் மனதில் உறுதி ஏற்பட்டு மதிப்பெண்களிய பெறுவர். சாதகமான குரு பெயர்ச்சி

பெண்கள் :

குரு 3ல் பெயர்ந்தாலும், பார்வை மற்றும் மற்ற கிரஹங்களின் சஞ்சார நிலை, மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் சகோதர வகையில் உதவி கிடைக்கும் பிறந்தவீட்டு சீதனம் சிலருக்கு கிடைக்கும், புதிய வீடு குடிபோகும் யோகம் உண்டாகும், பிள்ளைகளால் பெருமையும் கணவரின் அன்பும் நிறைந்து காணப்படும், புனித யாத்திரை சிலர் போகலாம். உழைக்கும் மகளிருக்கு கடும் முயற்சிக்கு பின் பதவி உயர்வு சம்பள உயர்வு இடமாற்றம் இவை ஏற்படும். பண வரவு தாராளம்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :

நரசிம்மரை வழிபடுவது நல்லது. முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் ப்ரதோஷ நாட்களில் நரசிம்மரை வழிபட்டால் நலம். சுதர்சன சக்ரத்தாழ்வாரோடு ந்ருஸிம்ஹர் சேர்ந்து இருக்கும் கோவில் என்றால் இன்னும் விசேஷம், பானகம் கரைத்து நரசிம்மருக்கு நைவேத்யம் பண்ணி விநியோகம் செய்யவும். ந்ருஸிம்ஹ மந்திரம் சொல்வது நல்லது. தான தர்மம் ஏழைகளுக்கு உதவுவது சரீர ஒத்தாசை இவை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

lakshmi narasimhachari குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

வெள்ளித்திரை செய்திகள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here