குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கன்னி

இதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, கன்னி ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


kanni rasi குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: கன்னி
கன்யா ராசி

உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய

45/100

புத்தி கூர்மையும் உண்மை பேசும் தன்மையும் உடைய கன்யா ராசி அன்பர்களே!

இந்த குரு பெயர்ச்சி ராசிக்கு 4ம் இடத்துக்கு பெயர்கிறது. இருந்தும் பெரிய முன்னேற்றம் இல்லை காரணம் ஏற்கனவே சனி கேது அங்கு இருக்கிறது கடந்த வருடங்களின் தொல்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது போல தெரியும்.

ஜனவரி 23,2020ல் சனிபகவான் 5ம் இடத்துக்கு போகும்போதும், அதே 5ல் ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் குருவின் சஞ்சாரமும் ஓரளவு நன்மை தரும். இருந்தாலும் குருவின் 10ம் இடத்து பார்வை பொருளாதார சிக்கலை தீர்க்கும். கலவையான பலன்களே இந்த குரு பெயர்ச்சி தரும்.

எதிலும் கவனம், வாக்கில் உஷார், உத்தியோகம் தொழிலில் கவனம் என்று இருந்தால் சமாளித்து விடலாம். பொருளாதார சிக்கல் அவ்வப்போது படுத்தும் சிக்கணம் தேவை இக்கணம் விட்டுக்கொடுத்து போவது பலவிஷயங்களின் தீவிரத்தை குறைக்கும்.

ஆரோக்கியம் :

6ம் இடத்தை கேது பார்ப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மருத்துவ செலவு அதிகரிக்கும், சிலருக்கு அறுவை சிகிச்சை செலவு ஏற்படும், 4ல் இருக்கும் சனி டிசம்பர் வரை தாய் தந்தையர் உடல் நலத்தை பாதிக்க செய்யும், தன்வந்திரி பகவானை வணங்குவது நல்லது. மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பது நலம் தரும். பொறுமையும் நிதானமும் கொண்டு நடப்பது ஆகார விஷயங்களில் கவனமாய் இருப்பது, தியானபயிற்சி போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

தற்போது சாதகமான சூழல் இல்லாததால் கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு வரும், கணவர்/மனைவி வழி உறவுகளுடனும் அவ்வளவு நெருக்கம் இருக்காது விட்டுக்கொடுத்து போவதும் குடும்பத்தாரோடு அதிக நேரம் செலவழித்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதும் நலம் தரும். பிள்ளை /பெண் திருமண ஏற்பாடு தள்ளிப் போவதுடன் பிள்ளை/பெண் காதல் விவகாரங்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும் தரலாம். அதனால் சில பிரிவுகளும் ஏற்படலாம். எதிலும் பொறுமை தேவை. நிதானம் மற்றும் விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மை இவை நலம் தரும்.

உத்தியோகஸ்தர்கள் :

வேலை பளு அதிகம் இருக்கும் இருந்தாலும் குருபகவானின் 10ம் இட பார்வை ஓரளவு நன்மை தரும், மேலதிகாரிகள் மட்டுமல்ல உடன் வேலை செய்வோருடன் கூட மோதல் வேண்டாம், புதிய முயற்சிகளை ஒருவருடம் அல்லது செப்டம்பர் 2020 வரை தள்ளி போடுவது நல்லது, இருக்கின்ற உத்தியோகத்தில் என்ன கஷ்டம் வந்தாலும் விடாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டில் வேலை செய்வோர் அதிக கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். வேலை இழப்பும் உண்டாகலாம். ஏப்ரல்,மே,ஜூன் 2020 மாதங்களில் பதவி உயர்வு சம்பள உயர்வு என்றும் விரும்பிய இடமாற்றம் எனவும் உண்டாகலாம், வேலை பளுவும் இந்த மாதங்களில் குறையும், சேமிப்பை அதிகரிப்பது நல்லது வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்.

தொழிலதிபர்கள்/வியாபாரிகள் :

தொழில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்காது. எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதை அடுத்தவருடம் வைத்து கொள்ளவும். அரசாங்கத்தினால் தொல்லை இருக்கும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும் வங்கி கடன்கள் இழுபறியாகும். தொழிலாளர்களால் அதிக பிரச்சனை உண்டாகும். குருவின் 10ம் இட பார்வை நன்றாக இருந்தாலும் ராகு இருப்பதால் கொஞ்சம் இழுபறியாகவே எதிலும் இருக்கும்.

கலைஞர்கள்:

புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் அதிக சிரமம் உண்டாகும், கடுமையான முயற்சிக்கு பின் சில வாய்ப்புகள் கிடைக்கும். பெயர் புகழ் விருது கிடைப்பது பாராட்டு கிடைப்பது என்பது துர்லபம், உடன் கலைஞர்களால் செலவு உண்டாகும். பணவிரயம் அதிகமாகி கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கணத்தை கடைபிடிப்பது நல்லது. இறைத்யானம் ஓரளவு நன்மை தரும்

அரசியல்வாதிகள் :

கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் தொண்டர்களை தக்க வைக்க அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் மோதல் இல்லாமல் இருப்பது நல்லது. எதிரி பக்கத்திலேயே இருந்து குழி பறிப்பார் கவனம் தேவை. குரு பார்வை பலம் தந்தாலும் எதிலும் விட்டுக்கொடுத்தால் தான் பலன் என்ற நிலை இருக்கும்.

விவசாயிகள் :

விளைச்சல் குறைவு, கால்நடைகளால் மருத்துவ செலவு உண்டாகும், வழக்குகளில் அதிக பணம் செலவாகும் சாதகம் இருக்காது. எதிர்பார்த்த பண வரவு தாமதம் ஆகும். புதிய வழக்குகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும், அக்கம்பக்கத்தாரோடு வீண் விவாதம் செய்யாமல் அனுசரித்து போவது நல்லது. பயிர்களை காக்க அதிக பணம் செலவழிக்க வேண்டும்.

மாணவர்கள் :

அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியர் பெற்றோர் சொல்படி நடப்பது அதிக நலம் தரும். சேர்க்கை நன்றாக இருக்காது. மனம் காதல் வயப்படும். படிப்பில் நாட்டம் போகாது. போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு குறைவு. வெளிநாட்டு படிப்பு எண்ணம் தாமதம் ஆகும். ஹயக்ரீவரை வழிபாடு செய்வது நலம் தரும்.

பெண்கள் :

சங்கடமான நிலை இருக்கும் அடுத்தவரை அனுசரித்து போவது நல்லது. எதிலும் நிதானம் பொறுமை அவசியம், தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தாலொழிய கஷ்டங்களை அனுபவித்துத் தீர்க்கவேண்டி இருக்கும். குடும்பத்தில் பண பிரச்சனை உடல் பாதிப்பு போன்றவை இருக்கும். பிள்ளைகளாலும் கஷ்டம் இருக்கும். உழைக்கும் மகளிர் அதிக உழைப்பை கொடுத்து சொல்ப பலனை பெறுவர் பதவி உயர்வு சம்பள உயர்வு என்பது கடினம். நிதானம் அவசியம். சுய தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும், கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நலம் தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :

மஹாலக்ஷ்மி தாயாரை வணங்குவது லக்ஷ்மி கோவிலில் விளக்கேற்றுவது போன்றவையும் தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவதும் நவக்ரகங்களில் சனிக்கும் குருவுக்கும் விளக்கேற்றி அர்ச்சனை செய்து கொள்வதும், சனி குரு காயத்திரியை ஜபிப்பதும் நலம் தரும்  அன்னதானம், கல்வி தானம் போன்றவையும் மிகுந்த நன்மையைத் தரும் கஷ்டத்தைக் குறைக்கும். லக்ஷ்மீ அஷ்டோத்திரம் லக்ஷ்மீ சகஸ்ரநாமம் போன்று படிக்கவும்.

lakshmi narasimhachari குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

வெள்ளித்திரை செய்திகள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here