குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: சிம்மம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


சிம்ம ராசி :

மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய

45/100

கர்வமும், சண்டையிடுவதில் விருப்பமும், நிலையான குணங்களும், நம்பகத்தன்மையும் உடைய சிம்மராசி அன்பர்களே!

குரு பகவான் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் 4ம் இடமான விருச்சிகத்துக்கு பெயர்கிறார். இது சாதகமற்ற நிலை என்றாலும் கூட பார்வைபலத்தால் ஓரளவு நன்மை உண்டாகிறது தற்போது 6ல் இருக்கும் கேது மற்றும் செவ்வாயால் ஓரளவு நன்மை உண்டாகிறது, முன்பு இருந்ததை விட இப்போது பரவாயில்லை என்ற வகையில் இந்த குரு பெயர்ச்சி அமைகிறது.

தொழிலில் வருமானம் வரும். இந்த குரு பெயர்ச்சி கலவையான பலன்களை தரும் மேலும் பிப்ரவரி 2019க்கு பின் கேது பகவான் சனியுடன் சேர்ந்து 5ல் சஞ்சரிக்கும் காலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் நிதானம் இழக்கச் செய்யும்.

தற்போதுள்ள கிரஹ சஞ்சார நிலைகள் கூட பெரிய முன்னேற்றத்தை தராது ஆனால் பெரிய கெடுதலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். பொதுவாக, உடல் நலம் மற்றும் ஜீவனம் ஆகிய இரண்டிலும் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும் பெயர்ச்சி இது.

உடல் ஆரோக்கியம் : கடந்த வருடங்களில் அதிக மன அழுத்தமும் உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் இருந்திருக்கும் அது தற்போது குறையும், இருந்தாலும் பித்தம், கபம், மனச்சோர்வு, நுரையீரல் மார்பு பாதிப்புகள் ஆகியவை தொடர்ந்து இருக்கும். மருத்துவச் செலவுகள் முன்பை விட குறைவாக இருக்கும் இது மார்ச் 2019 முடிய இருக்கும்; ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும் அப்போது உங்கள் சக்திகளை சேமித்து வைத்தால் பின் ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2019 வரையிலான கால கட்டத்தைச் சமாளிக்க உதவும். இருந்தாலும் வைத்ய நாதனை தினம் வணங்குவது வைத்யநாதாஷ்டகம் படிப்பது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.

குடும்பம் மற்றும் உறவுகள் : கடந்த காலங்கள் அளவு இல்லை என்றாலும் இன்னும் தொடர்ந்து குடும்ப பிரச்சனைகள் இருக்கும். உங்கள் மனைவி/கணவருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்குப் பிரிவுகள் ஏற்படலாம் கருத்து வேறுபாடுகளை களைந்து அனுசரித்து போவது ஓரளவு நன்மை செய்யும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம், புதிய முடிவுகளை எடுக்கு முன் உங்கள் ஜனன ஜாதகத்தை அலசி பின் முடிவு எடுப்பது நலம் தரும். புதிய உறவுகள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தினாலும் பழைய உறவுகளால் அவ்வப்போது தொல்லை வரும். எதிலும் ஒரு கவனம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது குடும்பஸ்தானத்தில் குரு அவ்வளவு நன்மை தரவில்லை

உத்தியோகஸ்தர்கள் : பணிச்சுமை கூடும், உடன் வேலை செய்பவர்களால் கொஞ்சம் தொல்லை இருக்கும்.4ல் வரும் குருவால் பெரிய பிரச்சனைகள் உத்தியோகத்தில் ஏற்படாது எனினும் தங்களின் தனிப்பட்ட பிரச்சனை உத்தியோகத்தை பாதிக்கும். ஏப்ரல் 2019க்கு பின் பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு ஓரளவே இருந்தும் ஏப்ரலுக்கு பின் பணிச்சுமை குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். விரும்பிய இடமாற்றமும் இருக்கும். பிப்ரவரி முதல் ராகுவால்  ஓரளவு நன்மை உண்டாகும்.

தொழிலதிபர்கள் / வியாபாரிகள்: சுமாரான நிலைதான்; பிறரை நம்ப வேண்டாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, அரசாங்க சலுகைகள் 2019 ஏப்ரலுக்கு பிறகே கிடைக்கும், போட்டிகள் எதிரிகள் அதிகமாவர். பண விஷயத்தில் கவனமாய் இருப்பது நல்லது, வெளியூர் பயணங்கள் நன்மை தரும். ஏப்ரலுக்கு பின் புதிய முயற்சிகள் தொழில் விஸ்தரிப்புகளை தொடங்குங்கள்.

கலைஞர்கள் : ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதமாகலாம், எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காது. ரசிகர்களை தக்க வைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். பண வரவும் குறையும். ஏப்ரல் 2019க்கு பின் நிலைமை சரியாகும். வாய்ப்புகள் பெருகும். சந்தோஷம் உண்டு.

அரசியல்வாதிகள் : பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களால் பிரச்சனை வரும். மேலிடத்தின் ஆதரவு குறையும். கவனமாய் இருத்தல் அவசியம் வார்த்தைகளை விடவேண்டாம் உறுதிமொழி எதுவும் தரவேண்டாம். ஏப்ரல் 2019க்கு பின்னர்  விரும்பிய பதவி கிடைக்கும். புகழ் சேரும்.

விவசாயிகள் : மகசூல் குறையும். வழக்கு விவகாரங்களில் மெத்தன போக்கு காணப்படும். புதிய வழக்குகளில் சிக்க நேரும். கவனம் தேவை கால்நடைகள் மூலம் சிறிய வருமானம் வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் தள்ளி போகும். குரு பார்வையால் ஓரளவு வருமானம் பெருகும்.

மாணவர்கள் : அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும். போட்டி பந்தயங்களில் வெற்றி என்பது சுமாராக இருக்கும். ஆசிரியர் பெற்றோர் ஆலோசனைபடி நடத்தல் நன்மை தரும் நண்பர்கள் சேர்க்கை விஷயத்தில் கவனமாய் இருத்தல் அவசியம். ஏப்ரல் 2019க்கு பின் சிலருக்கு வெளிநாட்டில் சென்று படிக்க யோகம் உண்டாகும்.

பெண்கள் : கணவர் மற்றும் குடும்பத்தாருடன் அனுசரித்து போகுதல் நலம் தரும். திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு குருவின் பார்வையால் திருமணம் கைகூடும். பணப்புழக்கம் ஓரளவே இருப்பதால் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. வேலைக்கு செல்லும் மகளிருக்கு குருவின் 7ம் இட பார்வையால் நன்மை உண்டு. சொந்த தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை தொழில்ரீதியான பயணங்கள் ஓரளவு நன்மை தரும். பொதுவில் விட்டுக்கொடுத்து செல்வதும் தேவையறிந்து செயல்படுவதும் நன்மை தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : தேய்பிறை அஷ்டமிநாளில் பைரவரை வணங்குவதும். ப்ரதோஷத்தன்று சிவனுக்கு நெய் விளக்கேற்றுவதும் தக்ஷிணாமூர்த்தியை வில்வமாலை கொண்டு அர்ச்சிப்பதும் நலம் தரும். குருப்ரீதியாக அன்னதானம் செய்யுங்கள். தக்ஷிணாமூர்த்தி காயத்ரியை அடிக்கடி சொல்லி கொண்டு இருக்கவும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.


குரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM


-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Loading...