குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கடகம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, கடக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


கடக ராசி :

புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம் முடிய

90/100

சுறுசுறுப்பும் நயமான வார்த்தைகளில் மயங்கி விடுபவருமான கடகராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி 4ம் இடத்தில் இருந்து 5ம் இடத்துக்கு பெயர்வது மிக சிறப்பான நிலை பூர்வபுண்ய ஸ்தானத்தில் குரு பகவான் அள்ளிக்கொடுப்பார். சனி பகவான் 6லும் ராகு ஜென்மத்திலும் சஞ்சரித்தாலும் குருவின் பூரண அருள் மறைமுக எதிரிகளை இல்லாமல் செய்துவிடும்.

உத்தியோகத்தில் ஒரு உயர்ந்த நிலையை கொடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் படுவதால் எதிலும் வெற்றி முன்னேற்றம் என்று இருக்கும். பிப்ரவரி 2019க்கு பின் ராகு 12ம் இடம் பெயர்வதால் மேலும் நன்மைகள் உண்டாகும்.

பொதுவில் பல முன்னேற்றங்களையும் சந்தோஷத்தையும் பண வரவையும் கொடுத்து நீண்டகால கனவுகளை நிறைவேற்றும் குரு பெயர்ச்சியாக இது அமையும். சரியானபடி திட்டமிட்டு வாழ்வை வளப்படுத்தி கொள்ளுங்கள் நல்ல சந்தர்பங்கள் உங்களை தேடிவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்

உடல் ஆரோக்கியம் : இந்த வருடம் உங்கள் உடல் நிலை சிறப்பாக இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும் 6ல் இருக்கும் சனியும் பெரிய கஷ்டத்தை கொடுக்காது தாய் தந்தையர் மற்றும் மனைவி பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் குறைந்துவிடும். மனம் நிம்மதியாக இருக்கும். தினம் லலிதா சகஸ்ரநாமம் சொல்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குடும்பம் மற்றும் உறவுகள் : பலவித மன வருத்தங்கள் வேலை நிமித்தமாகவே வேறுவிதத்திலோ பிரிந்த உறவுகள் இவையாவும் இந்த வருடத்தில் ஒன்று சேர்ந்து குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டுவரும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். பிள்ளைகளுக்குத் திருமணம் போன்றவை சுமூகமாக அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பெருகி உறவினர்கள் இடையில் மதிப்பு மரியாதை கூடும், கடந்த வருடங்களில் கசப்பாய் இருந்த உறவுகளும் இனி நெருங்கி வந்து சொந்தம் கொண்டாடுவர் உங்கள் வார்த்தைகளை கேட்டு பலரும் நடப்பர்.

உத்தியோகஸ்தர்கள் : அப்பாடா என்று பெருமூச்சு விட்டு கொள்ளுங்கள் உங்கள் எதிர்பார்ப்புகள் ஈடேறும் காலம் இது உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு நினைத்த இடமாற்றம் எல்லாம் ஏற்பட போகிறது, வெளிநாட்டு உத்தியோகம் சிலருக்கு கிடைக்கும், புதிய வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் உடன் கிடைக்கும். வேலையில் மன நிறைவு ஏற்படும் உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் வேலையில் ஈடுபடுவீர்கள் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மேலிடத்தில் வைத்த கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும்.

தொழிலதிபர்கள் /வியாபாரிகள் : புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வரும் நேரம் இது. இருக்கின்ற தொழிலை விஸ்தாரம் செய்யலாம், அரசாங்க உதவி வங்கி உதவி போன்றவை தாராளமாக கிடைக்கும், மறைமுக எதிரிகள் மறைவர். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் இயங்கி அதிக லாபத்தை ஈட்டி தருவர் கூட்டு தொழில்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அரசியல்வாதிகள் : புதிய பதவி தேடிவரும், மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், மக்களின் பாராட்டை பெறுவீர்கள் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவர் பணப்புழக்கம் தாராளம் இதுநாள் வரை இருந்துவந்த எதிர்களின் தொல்லை இனி இல்லை, வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் அடுத்துவரும் காலங்களும் நன்றாகிவிடும்.

கலைஞர்கள் : புதிய ஒப்பந்தங்கள் கைகூடும், நல்ல வருமானம் வரும் சமூகத்தில் அந்தஸ்து கூடும் மக்களின் பாராட்டு கிடைக்கும், அரசின் விருதுகள் கிடைக்கும், கேளிக்கை விருந்து விழா என்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள், வெளிநாட்டு பயணம் நன்மை தரும். சக கலைஞர்களால் நன்மை உண்டு.

விவசாயிகள் ; கால் நடை மூலம் அதிக லாபம் கிடைக்கும், மகசூல் பெருகி வருமானம் கூடும். புதிய நிலம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும், வழக்குகளில் சாதகம் அதிகம், அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான நிலை இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும்.

மாணவர்கள் : அதிக அக்கறையுடன் படிப்பதும், பெற்றோர் ஆசிரியர் சொல்படி நடப்பதும் நல்லது. போட்டி பந்தயங்கள் அதிக அனுகூலம் உண்டாகும், வெளிநாட்டு படிப்பு சிலருக்கு கைகூடும் மேல்படிப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு அது ஈடேறும். தொழில்கல்வி பயிலுவோருக்கு இது ஏற்ற காலம் நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதால் வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள் : பெண்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமைகிறது. குடும்பத்தில் ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை சமூகத்தில் அந்தஸ்து, புனித யாத்திரைகள், ஆடை ஆபரண சேற்க்கை புதிய வீடு குடிபோகுதல் என்று அமர்க்களமாக இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு விரைவிவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். வேலைக்கு செல்லும் மகளிருக்கும் சுய தொழில் செய்யும் பெண்களுக்கும் மிக சிறப்பான பலன்களை பெறுவர் பணவரவு தாராளம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உழைக்கும் மகளிரில் சிலர் புதிய சொத்து வாங்கலாம்.

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அருகில் தெக்ஷிணாமூர்த்தி கோவில் இருந்தால் சென்று விளக்கேற்றி வாருங்கள், சிவன் கோயில் அல்லது பெருமாள் கோவிலில் தாயார் சன்னதியில் முன் அமர்ந்து தியானம் செய்யுங்கள் தாயார் பெயரை உச்சரிக்கவும். முடிந்தவரை தான தர்மங்களைச் செய்வது நன்மை தரும். அனுமன் வழிபாடும் ராம நாமத்தைச் சொல்வதும் நல்ல பலனை தரும். அன்னதானம் செய்யுங்கள்


குரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM


-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Loading...