குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மிதுனம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, மிதுன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, மிதுன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


மிதுன ராசி :

மிருகசீரிடம் 3,4, திருவாதிரை புனர்பூசம் 3ம் பாதம் முடிய

55/100

நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான மிதுனராசி அன்பர்களே!

உங்களுக்குக் குருப்பெயர்ச்சி சுமாரான நிலையை தரும். இருந்தாலும் 7ல் சஞ்சரிக்கும் சனியும் பிப்ரவரி 19 முதல் 7க்கு வரும் கேதுவும் ஓரளவு நலம் தரும். குரு பார்வை பலம் தரும், வீட்டிலும் உத்தியோகத்திலும் அரசியல் இருக்கும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது பணப்புழக்கம் பரவாயில்லை.

எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாதீர்கள் நன்கு யோசித்து முடிவு எடுப்பது நலம் தரும், 2ல் இருக்கும் ராகுவும் கொஞ்சம் சிரமத்தை தரும் இருந்தாலும் குடும்ப ஸ்தானத்துக்கு குருவின் பார்வை இருப்பதால் பெரிய பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.

மேலும் அதிசார வக்ரமாய் தனூர் ராசிக்கு குருபகவான் பெயரும் ஏப்ரல் 19 முதல் ஜூலை 19 வரை மிகுந்த சாதகமான நிலை உண்டாகும். அக்கம்பக்கத்தாரோடு இணக்கமாக செல்வது நல்லது குடும்பத்தில் முடிவு எடுப்பது சிரமமாக இருக்கும் மனைவி பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள்.

பொறுமையாக நிதானமாக இதை கையாள வேண்டும். வரும் பணத்தை கொஞ்சம் சேமிப்பது அடுத்துவரும் காலங்களுக்கு நல்லது.

ஆரோக்கியம் : பொதுவாக 6ல் வரும் குரு கொஞ்சம் உடல் பாதிப்பை தருவார். குடல், எலும்பு கல்லீரல் போன்ற நோய்களை தருவார் மேலும் 7ல் இருக்கும் சனியும் பெற்றோர் மற்றும் மனைவி/கணவர் இவர்களுக்கு கொஞ்சம் நோயை தருவார். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையான மருத்துவ ஆலோசனைகளை எடுத்து கொள்வது நலம் தரும். மேலும் பிப்ரவரி 2019ல் ஜென்மத்தில் வரும் ராகுவும் அதிக பாதிப்பை தரும். மருத்துவர் அறிவுரையை மிக கவனமாக பின்பற்ற வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம், தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது நலம் தரும்.

குடும்பம் மற்றும் உறவுகள் : இந்த குரு பெயர்ச்சி குடும்பத்தில் சில தேவையில்லாத பிரச்சனைகளை கொண்டு வரும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும், கணவன்/மனைவி வீட்டாருடன் மோதல் இருக்கும், பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம் இருந்தாலும் சனியின் சாதகம் மற்றும் குருவின் 2ம் இட பார்வை பலத்தால் பெரிய பிரச்சனைகள் வராது. உறவுகளாலும் சங்கடங்கள் வந்தாலும் சமாளித்து விடலாம்.

உத்தியோகஸ்தர்கள் : கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும்; என்ன உழைத்தாலும் பெயர் இருக்காது. மேலதிகாரிகளிடம் உங்களை பற்றிய புகார்கள் போகலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைப்பதில் தாமதம் ஆகலாம், வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரியலாம். நல்ல வேலை தேடுவோருக்கு சுமாரான வேலை கிடைக்கும். இருந்தாலும் ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரையிலான காலகட்டத்தில் நல்ல உயர்ந்த நிலையை எதிர்பார்க்கலாம் சிலருக்கு வெளிநாட்டு உத்தியோகம் கிடைக்கும் அல்லது மிக நல்ல உத்தியோகம் கிடைக்கும். கொஞ்சம் பொறுமை விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் தன்மை இருந்தால் பெரிய கஷ்டம் ஏதும் வராது

தொழிலதிபர்கள் / வியாபாரிகள் : எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தினால் தொல்லை என்று இந்த குருபெயர்ச்சியில் இருக்கும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது. ஏப்ரல் 19 வரை புதிய தொழில் முதலீடுகளை செய்வது தள்ளிப்போடுவது நல்லது. தொழிலாளிகளை திருப்தி செய்ய முடியாமல் திணறலாம். எதிலும் விழிப்புடன் இருப்பதும் பண விரயத்தை தவிர்ப்பதும் நலம் தரும். வீண் வழக்குகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

அரசியவாதிகள் : பெரிய பிரச்சினைகள் வராது பதவி கிடைப்பது கொஞ்சம் கடுமையான முயற்சி எடுத்தால் தான் என்ற நிலை இருக்கும். அதேநேரம் மேலிடத்தின் ஆதரவு இருக்கும். தொண்டர்கள் நல்ல உதவிகளைச் செய்வர். பண புழக்கம் தாராளம். புதிய பதவி என்பது ஏப்ரல் 19க்கு பின் தான்

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரவு தாராளம். புகழ் பாராட்டு கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். இருந்தாலும் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விவசாயிகள் : மகசூல் நன்றாக இருக்கும் சேமிப்பு கூடும். கால்நடையால் அதிக நன்மை இராது. புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம் கவனமாயிருத்தல் நலம். புதித சொத்துக்கள் வாங்கும் எண்ணம் தள்ளி போகும் பரவாயில்லை என்பது மாதிரி இந்த குருபெயர்ச்சி இருக்கும்.

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டும், ஆசிரியர் அறிவுரை படி நடக்க நன்மை உண்டு. மார்க் குறையாது எனினும் எதிர்பார்த்த இடம் கிடைப்பது கடினம், போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் நிலை உண்டாகும்.

பெண்கள் : குதூகலம் அதிகரிக்கும் சுப யாத்திரைகள் சென்றுவருவார்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும். பொருளாதார வளம் கூடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உழைக்கும் மகளிருக்கு அதிக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு தாமதம் ஆகும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினம் இருந்தாலும் ஏப்ரலுக்குப் பின் நல்ல நிலை உண்டாகும்

வணங்கவேண்டிய தெய்வமும் நல்ல செயல்களும் : சுதர்ஸன சக்ரத்தாழ்வார், நரசிம்மர் வழிபாடும் தினமும் 12 தடவை ப்ரதிக்ஷணமும் நன்மை தரும், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதும், தேய்பிறை அஷ்டமி நாளில் சொர்ணபைரவரை வழிபடுவதும் குல தெய்வ வழிபாடும் நலம் தரும், ஊனமுற்றோர், இயலாதோருக்கு சரீர ஒத்தாசை செய்வது அன்னதானம் செய்வது ஏழை குழந்தைகள் படிக்க உதவுவது போன்றவை நன்மை தரும்.


குரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM


Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.