11/07/2020 1:26 PM
29 C
Chennai

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: ரிஷபம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, ரிஷப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

சற்றுமுன்...

அருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து!

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்

கொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்!

அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்

கொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா!

பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.

அழகர்கோயிலில் குவியும் கூட்டம்! கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை!

மதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, ரிஷப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


rishabham rasi குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: ரிஷபம்
ரிஷப ராசி :
 

கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய

50/100

துணிச்சல் மிகுந்தவரும் எல்லோராலும் விரும்பக் கூடியவராயும் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ஜனன ஜாதகத்தில் குருபகவான் சனி பகவான் நன்றாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி பற்றி கவலை வேண்டாம். பொதுவாக குரு உங்கள் ராசிக்கு 8ம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார் அங்கு ஏற்கனவே சனிபகவான்+கேது பகவான் இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் 8ல் சனி கஷ்டத்தை தந்தாலும் 7ல் குரு பகவான் காப்பாற்றி கொண்டிருந்தார். இப்பொழுது பிப்ரவரி 2020 வரை குரு+சனி+கேது இணைந்து சில சிக்கல்கள் இன்னல்களை தருவார்கள்,  ஜனன ஜாதகம் சுமாராக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும், சமூக அந்தஸ்து குறையும், பொருளாதாரம் பாதிக்க படும் இருந்தாலும் ஒரு 50 % நன்மையும் உண்டு

மற்ற கிரஹ சஞ்சார நிலைகளாலும், ஜனவரியில் சனிபகவான் 9ல் செல்வதாலும், செவ்வாய் மற்றும் சுக்ரன் சஞ்சாரத்தால் நல்ல சில விஷயங்களும் பண வரவும் தரும். மொத்தத்தில் கலந்த பலன்களாய் இருந்து கொண்டிருக்கும்.

ஆரோக்கியம் :

ருண ரோக சத்ருஸ்தானதிபதியாக சுக்ரன் இருப்பதால் அந்த சுக்ரன் சஞ்சாரம் செப்டம்பர் 2020 வரை நன்றாக இருப்பதால் பெரியபாதிப்புகள் வராது, அதே நேரம் ஜனவரியில் சனி பகவான் 9ம் இடத்துக்கு செல்வதால் பெற்றோரின் உடல் நிலையில் பாதிப்பு வரலாம் அல்லது குழந்தைகள் சகோதரவகையில் கொஞ்சம் உடல் தொந்தரவுகள் ஏற்படலாம் இருந்தாலும் சரியான வைத்திய சிகிச்சையால் நோய் கட்டுப்படும். பொதுவாக இந்த குருபெயர்ச்சி முழுவதும் கொஞ்சம் உடல் படுத்தல் அல்லது குடும்ப அங்கத்தினரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும், 8ல் சனி கேது குரு இருப்பதாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அல்லது வேலை, தொழில் நிமித்தமாக படிப்பு நிமித்தமாக குடும்பத்தை பிரியும் நிலை, சகோதரத்தினால் அல்லது உறவுகளால் தொல்லைகள், மன கசப்பு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி கொண்டிருத்தல் பணம் பிரச்சனை போன்றும் உங்கள் பேச்சை உறவினர்கள் மதிக்காமல் இருத்தலும் நடக்கும். எல்லோருடனும் கடுமையான வாக்குவாதம் இருக்கும். கூடுமானவரை தியான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம், சமூகத்தில் அந்தஸ்து குறைய வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்கள்:

வேலையில் கவனமாய் இருக்க வேண்டிய தருணம், மேலதிகாரிகள் கோபம் உடன் வேலை செய்வோரால் தொந்தரவு அவப்பெயர் ஏற்படுதல் வேலை இழப்பு போன்றவையும் வழக்கு போன்ற பிரச்சனைகளும் உண்டாகும், மேலும் கேதுபகவான் குழப்பதை ஏற்படுத்தி ஒரு பயத்தை கொடுத்து கொண்டிருப்பார் அச்சத்தினால் தவறுகள் உண்டாகும் அதை சரிசெய்ய முடியாமல் அதனால் உத்தியோக இழப்பு ஏற்படலாம். இறைவனை கெட்டியாக பிடித்து கொள்வது நல்லது.

தொழிலதிபர்கள் / வியாபாரிகள் :

கணக்கு வழக்குகளி சரியாக வைத்து கொள்வதும், தொழிலாளர்களை விரோதித்து கொள்ளாமல் இருப்பதும், கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், புதிய தொழில் தொடங்காமல் இருப்பது அல்லது தொழில் விஸ்தரிப்பு செய்யாமல் இருப்பது நல்லது, பயணங்களும் பலன் தராது, அரசாங்க அனுகூலம் இருக்காது. தொழிலாளர்களால் அதிக செலவு உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள்:

இந்த குரு பெயர்ச்சி சுமாரான பலனை தரும், மேலும் குரு சனி கேது சேர்க்கை கட்சி மேலிடத்தில் அவப்பெயர் அல்லது தொண்டர்களின் விரக்தி, பண விரயம், சோர்வு, அவ நம்பிக்கை போன்றவை உண்டாகும், எதிலும் கவனமாய் இருத்தலும், வீண் விவாதங்களை தவிர்ப்பதும், வாக்கு கொடுக்காமல் இருப்பதும் எதிரிகளை கவணிப்பதும் ஓரளவு நன்மை தரும்.

கலைஞர்கள் :

பண விரயம், அலுப்பு, எதிர்பார்த்த இடங்களில் தோல்வி, புதிய வாய்ப்புகள் நழுவி போகுதல், வீண் சிரமம், நண்பர்களால் தொல்லை, அலைச்சல், பெயர் கெடுதல், ரசிகர்கள் விலகுதல், துன்பம் இருக்கும், கூடுமானவரை சேமிப்பை பத்திரப்படுத்தி கொள்வது நல்லது, இந்த வருடம் பெரிய வாய்ப்புகள் வராது, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சேமிப்பது நல்லது.

விவசாயிகள் :

புதிய வழக்குகள் உண்டாகும், விளைச்சல் குறையும், பணப்பயிர்கள் வெற்றியை தராது, கடன் தொல்லை உண்டாகும், கால்நடைகளால் மருத்துவ செலவு உண்டாகும், குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்கும், எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.

மாணவர்கள் :

புதன் ஜனன ஜாதகத்தில் நன்றாக இருந்தால் மட்டுமே குருவும் நன்றாக இருந்தால் இந்த குருபெயர்ச்சி பெரிய பாதிப்பை தராது, நண்பர்கள் சேர்க்கையை ஒழுங்கு படுத்துவது நல்லது. படிப்பில் கவனம் செலுத்த தியான பயிற்சி ஆசிரியரின் ஆலோசனை உதவும், பெற்றோர் வழிகாட்டுதல் படி நடப்பது, புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வருடம் சுமார். செப்டம்பர் 2020க்கு பின் ஓரளவு நன்மை உண்டாகும்.

பெண்கள் :

எதிலும் கவனமாய் இருத்தலும், வீண் விவாதங்களை தவிர்த்தலும், பெரியோர்களை மதித்தலும், குடும்பத்தினரை அனுசரித்து போகுதலும் நன்மை தரும், அக்கம்பக்கத்தாரோடு சுமூக சூழலை உண்டாக்குவது நல்லது, செலவுகள் அதிகரிக்கும், குடும்பத்தில் உறுப்பினர்களுடன் அடிக்கடி சண்டை உண்டாகும், கணவர் மனைவிக்குள் பிரிவு மன ஸ்தாபங்கள் உண்டாகும், உடல் உபாதைகளும் ஏற்படும், உழைக்கும் மகளீர் அதிக உழைப்பை சிந்தினாலும் பலன் குறைவு வேலையில் சிலபல பிரச்சனைகள் தோன்றி வேலையை விடும்படியும் இருக்கும். மகிழ்ச்சி குறைவு ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நல்ல செயல்களும் :

அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் அஷ்டம சனி  ஜனவரி 2020 வரை நடப்பதால் ஆஞ்சநேயரையும் சனீஸ்வர பகவானையும் வணங்குங்கள். அஷ்டம குரு தக்ஷிணாமூர்த்தியை வணங்குவதும் நன்மை தரும். கேதுவுக்கு பிள்ளையாரை வணங்குகள். பொருளாதாரத்தில் நலிவடைந்த உறவினர்களுக்கு உதவுங்கள், அன்னதானம் செய்யுங்கள், ஏழை மாணவர்கள் படிக்க உதவுங்கள்

lakshmi narasimhachari குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: ரிஷபம்

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: ரிஷபம்

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை