குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மகரம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, மகர ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, மகர ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

makaram rasi குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: மகரம்
மகர ராசி :

உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய

60/100

எதிலும் கொஞ்சம் சுலோவாக இருக்கும் மகரராசி அன்பர்களே!

குருபகவான் 12 இடத்துக்கு செல்வது ஓரளவு சுப நிகழ்ச்சிகளை உண்டுபண்ணி கொஞ்சம் நன்மையை தருவார் ஏழரை சனியின் தாக்கம் ஜனவரி 23 முதல் ஜென்மத்தில் சனிபகவான் வருகிறார் அது கொஞ்சம் மன அழுத்தத்தை தரும்

மேலும் 12ல் குரு,சனி,கேது சேர்க்கை கலவையான நல்ல மற்றும் கெட்டபலன்களை தரும், இருந்தாலும் இருந்த குரு பெயர்ச்சி 4ம் இடத்தையும், 8ம் இடத்தையும் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நன்மை, விசேஷங்கள் நடத்தல் ஆயுள் நன்றாக இருத்தல், தெய்வ பக்தியில் நாட்டம் என்று நன்றாகவே இருக்கும், பொருளாதாரம் அவ்வப்போது பாதித்தாலும் சமாளித்து விடுவீர்கள்,

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும், புதிய வரவுகளும் உண்டாகி மகிழ்ச்சியை தரும், உத்தியோகம் தொழில் ஓரளவு நன்றாக இருந்து ஜீவனத்தை நன்றாக வைத்திருக்கும். பொதுவில் நன்மை அதிகமும் அதே நேரம் துன்பம் ஓரளவும் இருந்து கலவையான குருபெயர்ச்சி பலன்களை அனுபவிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம் :

12ல் இருக்கும் கேதுவும், 6ல் இருக்கும் ராகுவும், மற்றும் செவ்வாயின் சஞ்சாரமும் ஓரளவு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும், தேமல் தோல் வியாதிகள் அடிபடுதல் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொடுத்தாலும் குருவின் 9ம் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும், குடும்ப அங்கத்தினர்களின் உடல் நிலைகளிலும் சிறு சிறு பாதிப்பை உண்டாக்கும் இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை சரியான ஆகார பயிர்ச்சி, தியான பயிர்ச்சி போன்றவைகள் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

கணவர் மனைவிக்குள் சிறு சிறு பிணக்குகள் வரும், பெரியோர்களிடம் சண்டை வரலாம் அதே நேரம் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் பிணக்குகளை தீர்த்து சந்தோஷத்தை தரும், விட்டுக்கொடுத்து போவதால் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராது பிள்ளைகளை சரியாக கையாண்டால் அவர்கள் சொல்படி கேட்பார்கள், உறவினர்கள் நெருக்கமாக இருப்பர் சில உறவினர்களால் நன்மையும் உண்டு. பொதுவில் குடும்பம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் பெரும்பாலும் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் :

பதவி உயரும், சம்பளம் கூடும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு கிடைக்கும். அயல்நாட்டு உத்தியோகம் சிலருக்கு உண்டாகும். வேலை பளுவும் அலைச்சலும் கூடவே இருக்கும். கடந்த காலங்களில் இருந்த சந்தோஷம் வேலையில் இருந்த உற்சாகம் குறைவு ஏற்படும், புதிய வேலைக்கு முயற்சித்தால் ஏப்ரல் வரை இழுத்தடிக்கும். இருந்தாலும் எதிலும் கவனமாய் இருத்தல் நலம்.

தொலதிபர்கள்/வியாபாரிகள் :

கூட்டு தொழில், பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும், வங்கி கடன் முயற்சிக்கு பின் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது நல்லதுதான் என்றாலும் பலன் உடனடியாக கிடைக்காது அதே நேரம் நஷ்டம் ஏற்படாது தொழில் மெதுவாக செல்லும், கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது, அரசாங்கத்தின் உதவி இழுபறிக்கு பின் கிடைக்கும்.

கலைஞர்கள் :

சில சமயம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் புதிய ஒப்பந்தங்கள் பண வரவை அதிகரிக்க செய்யும் பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். ஜனவரிக்கு பின் ஓரளவு வளர்ச்சி இருக்கும் பண வரவு தாராளமாக இருக்கும் சேமியுங்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை

அரசியல்வாதிகள் :

ஆளும் கட்சியாய் இருப்போருக்கு பதவியில் மிக உயர்ந்த நிலை இருக்கும். தொண்டர்களும், கட்சி மேலிடமும் பாராட்டும்படி செய்கைகள் இருக்கும். மற்ற கட்சியினருக்குப் பதவி நிச்சயம். புகழ் பெருகும். அதேநேரம் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிரிகள் தொல்லையும் இருந்து கொண்டிருக்கும்.

விவசாயிகள் :

மகசூல் நன்றாக இருக்கும்., புதிய இன பயிர்வகையால் லாபம் உண்டாகும். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும், கால்நடையால் அதிக நன்மை விளையும். வழக்குகள் சாதகமாகும். அக்கம்பக்கத்தாரோடு விவாதம் வேண்டாம். வழக்குகளில் மெத்தனம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம், பணம் செலவு செய்யும் போது கவனித்து செய்வது நல்லது.

மாணவர்கள் :

நல்ல நிலை படிப்பில் அதிக அக்கறை செலுத்துவர், நல்ல மதிப்பெண் பெறுவர், விரும்பிய பாட திட்டத்தில் சேரலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். பலரின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆசிரியர் வழிகாட்டுதல்படி நடப்பது நலம் தரும்.

பெண்கள் :

குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் கைகூடி வரும். சுப நிகழ்வுகளால் மனம் மகிழ்ச்சியாய் இருக்கும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை வீடு வாகன யோகங்கள் உண்டாகும். சிலருக்கு குடும்பத்துடன் புனித பயணம் செல்ல வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியும் உயர்ந்து உற்சாகம் தரும். அதே நேரம் வேலை பளு அதிகரிக்கும். சுய தொழில் செய்யும் மகளிருக்கு ஓரளவு நன்மை உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதும் நல்ல பலனை தரும்.

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :

அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்லுங்கள், ராமநாமத்தைத் சொல்லுங்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது சனிக்கிழமைகளில் சாற்றுங்கள், ஒருமுறை வெண்ணை சாற்றுங்கள். லக்ஷ்மீக்கு விளக்கேற்றுங்கள் முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள், தான தர்மங்களை நிறைய செய்யுங்கள்

lakshmi narasimhachari குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

வெள்ளித்திரை செய்திகள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here