குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கும்பம்

Published:

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, கும்ப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…

kumbham rasi - 2026
கும்ப ராசி

அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி முதல் 3 பாதங்கள் முடிய

85/100

வாசனை திரவியங்கள், ஆடம்பர பொருட்கள் மீது ஆசையும் வாழ்விலே ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டிருப்பதுமான நிலையில் உள்ள கும்ப ராசி அன்பர்களே!

குருபகவான் இதுவரை 10ல் இருந்து கலவையான பலனை தந்திருப்பார் தற்போது ராசிக்கு 11ல் வந்து அளப்பறிய நன்மையை செய்கின்றார். மேலும் ஏற்கனவே 11ல் இருந்து கொண்டு பலவித நன்மைகளை செய்துவரும் சனி, கேது மேலும் ஜனவரி 23,2020 வரை மகிழ்ச்சியை தரப்போகின்றனர்.

மகரத்துக்கு சனி பெயர்ந்து ஏழரை சனி ஆரம்பித்தாலும் 2020ல் பெரிய கஷ்டங்கள் ஏதும் நடக்காது, முயற்சிகளில் வெற்றி உண்டாகும், உத்தியோகத்தில் தொழிலில் மிக நல்ல நிலை இருக்கும், பண வரவு தாராளம்,

குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமணம், குழந்தை பாக்கியம் என்று சுப நிகழ்வுகளால் மனம் நிம்மதி அடையும், இந்த குரு பெயர்ச்சி அபரிமிதமான பலன்களை தருவதால் உங்கள் எதிர்கால திட்டங்களை சரியாக முடித்து கொள்ளுங்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் - ஆக.19 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

உடல் ஆரோக்கியம் :

கொஞ்சம் படபடப்பு சிறு சிறு உபாதைகள் என்று இதுவரை இருந்திருக்கும். இனி அவை இல்லை, உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நாள்பட்ட வியாதிகள் குணமாகும், குடும்ப அங்கத்தினர்களின் வியாதிகளும் நன்கு குணமாகி ஆரோக்கியம் மேம்படும், பெரிய வியாதிகள் வராது, மனம் தெளிவாக இருக்கும், நேர்மறை சக்திகள் உங்களை ஆக்ரமித்து கொள்ளும், ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதியும் குருவின் பார்வையால் நன்மைகளை செய்வார்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

கடந்த வருடம் போல் இந்த குரு பெயர்ச்சியும் மிகுந்த சாதகமான நிலையை கொடுக்கும் மேலும் சனி ராகு போன்ற கிரஹங்களின் சாதக நிலையும் குடும்பத்தில் ஒற்றுமையை கொண்டு வரும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவர். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள், மகன்/மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தால் அது கைகூடி நல்லபடியாக திருமணம் முடியும், திருமணத்தை எதிர்பார்த்து இருப்போருக்கு திருமணம் கைகூடும், குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் உறவினர்கள் நல்ல மதிப்பும் மரியாதையும் தருவார்கள் பிள்ளைகளால் சந்தோஷம் பெருகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை கேட்பர். சொந்தங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்:

விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு சம்பள உயர்வு என்று இருக்கும். வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள், உடன் வேலை செய்வோரால் நன்மை உண்டாகும். ஜனவரி 23,2020ல் சனி பெயர்ச்சியால் ஒரு இடமாற்றம் இருக்கும். அதுவும் சாதகமாகவே இருக்கும். இந்த வருடமும்  நல்ல நிலை உண்டாகும். புதிய உத்தியோகத்துக்கு முயற்சித்தால் கிடைக்கும், வேலையில்லாதோருக்கு இந்த குருபெயர்ச்சி நல்ல வேலையை கொண்டு தரும்.

தொழிலதிபர்கள் /வியாபாரிகள் :

வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், போட்டியாளர்கள் தொல்லை இன்றி நிம்மதியாக இருக்கலாம். சேமிப்பு கூடும். அரசாங்க அனுகூலம் உண்டு. ஏப்ரல்,மே,ஜூன் காலகட்டத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும் போட்டியாளர் தொல்லை இருக்கும். குரு பார்வையால்வளர்ச்சி அதிகம் இருக்கும். புதிய தொழிலை தொடங்குவோருக்கு ஏற்றகாலம் இது, தொழில் விஸ்தரிப்பும் செய்யலாம், வங்கி உதவி கிடைக்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

கலைஞர்கள் :

புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் கூடும். சேமிப்பு வக்ரகதி காலத்தில் பலன் தரும். பெரிய கடுமையான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். ஏப்ரல் மே,ஜூன் மாதங்களில் கொஞ்சம் இறக்கம் இருக்கும் ஆனாலும் குருபார்வை பலம் தரும்.

அரசியல்வாதிகள் :

 நல்லகாலம் பிறந்துவிட்டது எனலாம் பதவி, புகழ் தேடி வரும். மேலிடத்தில் நல்லபெயர் இருக்கும். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் மறைவர், வாக்கு கொடுப்பதில் நிதானம் தேவை, ஏப்ரல், மே,ஜூன் மாதங்களில் யாரையும் பகைத்து கொள்ளாமல் வார்த்தைகளை விடாமல் கவனமாய் இருப்பது நல்லது . அதன் பின் நல்ல நிலைதான்.

விவசாயிகள் :

பணப் பயிர்கள் மூலம் லாபம் வரும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வழக்குகளில் சாதகம் இருக்கும். பணவரவு தாராளம், இல்லத்தில் சுப செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். சேமிப்பும் இருக்கும். ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் கொஞ்சம் கவனம் நிதானம் தேவை அக்கம்பக்கத்தாரோடு வீண் விவாதம் வேண்டாம், புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். ஜூனுக்கு பின் நல்ல நிலை வருமானம் அதிகரிப்பு என்று ப்ரமாதமாக இருக்கும்.

மாணவர்கள் :

படிப்பில் அதிக அக்கறை இருக்கும் நல்ல மதிப்பெண் எடுப்பர், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். ஆசிரியரின் அறிவுரைப்படி நடப்பதால் எல்லோரிடமும் நல்ல பெயர் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு படிப்புக்கு ஏற்பாடு ஆகும். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.18 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

பெண்கள் :

மகிழ்ச்சி அதிகரிக்கும், இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடக்கும். பொருளாதார வளம் கூடும். புதியவீடு வாகன யோகங்கள் ஆடை ஆபரண சேற்க்கை உண்டாகும். சுப யாத்திரைகள் சிலர் செல்வர். உழைக்கும் மகளிருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழில் செய்வோருக்கு ஏற்றம் இருக்கும் வங்கி கடன் எளிதில் கிடைக்கும். பொதுவில் இந்த குரு பெயர்ச்சி பெரிய கஷ்டங்களை தராது மகிழ்ச்சியை நிறைய தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும்  :

பெருமாள் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றுங்கள். வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். முடிந்தவரையில் அன்னதானம் வஸ்திரதானம் போன்றவையை செய்யுங்கள். சரீர ஒத்தாசையை செய்யுங்கள். ஏழை குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள்.

lakshmi narasimhachari - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Related articles

Recent articles

spot_img