kadalur hospital
kadalur hospital

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் ஆக்சிஜன் சிலிண்டரை விழுங்கியதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா இவருடைய மனைவி கயல்விழி இரண்டு வாரத்திற்கு முன்பு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக இவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு வந்த மருத்துவர் மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாகக் கூறி கணவனுக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் கருவியை மருத்துவர் பிடிங்கி சென்றதாக கூறப்படுகிறது

மேலும் மனைவி என்னுடைய கணவனுக்கு பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை எடுக்கவேண்டாம் என மருத்துவர்களிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் நோயாளியை அலட்சியப்படுத்தி ஆக்சிஜன் கருவியை பிடிங்கி சென்றதால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் துடிதுடித்து உயிர் இழக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மனைவியின் கண் முன்னே கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண்மணி மருத்துவமனையில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே என்னுடைய கணவனின் உயிரை தர இயலுமா என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

மேலும் ஒரு நோயாளியை கொன்று விட்டு இன்னொரு நோயாளியை காப்பது நியாயமா என பணியிலிருந்த மருத்துவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் அவருடைய இறப்புக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை. இதுபோன்ற தொற்றுநோய் காலகட்டத்தில் ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த மருத்துவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற செயல்கள் இருக்கின்றது.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending