
கூகுள் நிறுவனத்தின் பல சேவைகளை தான் உலகின் பெரும்பாலான நாடுகள், நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இலவசமாக வழங்கிவந்த ஒரு சேவைக்கு கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இலவச சேவையாக இருந்த கூகுள் ஃபோட்டோஸ் வசதிக்கு கட்டணம் விதிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இனிமேல் கிளவுட் வசதி மூலம் 15 GB வரை மட்டுமே புகைப்படங்களை இலவசமாக சேமித்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
அதற்கு மேலாக புகைப்படங்களை சேமித்து வைக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கட்டண நடைமுறை ஜுன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.