வண்டியில் காய்கறி ஏத்த சொன்னா.. காதலியை ஏற்றி கடத்திய இளைஞன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vegetable van
vegetable van

16 வயது சிறுமியை காய்கறி வண்டியில் கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார்.

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் பகுதியில் பென்னலூர் என்னும் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்பவர் கோபால் (23) .

இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார் இந்நிலையில் அச்சிறுமியை கோபால் காதலித்ததாக தெரிகிறது .

மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 16 வயது சிறுமியை காய்கறி வண்டி மூலம் கடத்தி சென்றுவிட்டார்.

அந்த சிறுமியின் பெற்றோர் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

மேலும் மகளை காணவில்லை என்று தெரிந்தவுடன் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அச்சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த மகளிர் காவல் துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் தாம்பரம் அருகில் உள்ள இரும்புலியூர் என்னும் கிராமத்தினை சேர்ந்த கோபாலின் நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு 16 வயது சிறுமியை பெற்றோரிடம் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று வைத்திருந்த கோபால இல போக்சோ சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.