கணவன் வெளிநாட்டில்.. மாமியார் கொடுமையால் இளம்பெண் விபரீத முடிவு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
meena
meena

திருவள்ளூர் மாவட்டத்தில் மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை.

திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் இவருடைய மனைவி மீனா வயது 21 இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது

கணவன் ரமேஷ் திருமணமான 3 மாதத்தில் வெளிநாட்டிற்கு வேலை பார்க்க சென்றுள்ளார். தம்பதிகளுக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்நிலையில் மனைவி மீனா சோழபுரத்தில் மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் மனைவி மீனாவுக்கும் மாமியாருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மனைவி மீனா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மீனாவின் தந்தை தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்நிலையில் பெண் வீட்டார் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவன் வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமான இரண்டே ஆண்டுகளில் இருந்ததால் இந்த வழக்கை ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.