கணவர் கொரோனாவால் மரணம்! குழந்தைகளுடன் மனைவி தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
poison
poison

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இருந்து கொண்டுதான் இருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக நெருங்கிய உறவுகளை இழக்கும் வேதனை எவராலும் அறிய முடியாதது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் கொரோனாவால் கணவர் இறந்ததால், இரண்டு குழந்தைகளுடன் மனைவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் பாஸ்கர் கொரோனாவால் உயிர் இழந்த காரணத்தால் துக்கம் தாங்காமல் ஆறு மற்றும் 11 வயது குழந்தைகளுடன் நித்தியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.