ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழம்! அதிகாரிகள் பறிமுதல்!

Published:

mango - 2026

ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைத்த சுமார் 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியிலுள்ள ஒரு கடையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களை வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பெண்ணாடம் கடை வீதி மற்றும் மீனவர் தெருவில் உள்ள பழ கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் பெண்ணாடம் மீனவர் தெருவிலுள்ள சின்னத்துரை என்பவரது மாம்பழ குடோனில் சோதனை செய்ய சென்றுள்ளனர். ஆனால் அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது.

மேலும் சின்னத்திரை வெளியூருக்கு செல்லும்போது கடையை பூட்டி சாவியை எடுத்து சென்றதாக கூறியுள்ளார்.

எனவே அவரது மருமகளின் கண்பார்வையில் குடோனின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே புகுந்து சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் சுமார் 1 டன் மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இதனையடுத்து அவற்றை பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயனம் மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்பின்னர் மாம்பழங்கள் அனைத்தும் வெள்ளாற்றின் கரையில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை பழுக்க செய்யும் செய்ததால் சின்னதுரையின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img