ஏடிஎம் போகாமல் பணம் எடுக்க வழி! வங்கியின் புதிய அறிமுகம்!

Published:

atm
atm

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முக்கிய கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்றாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. கூட்டம் கூடுவதில் முக்கிய இடங்களில் ஒன்றாக ஏடிஎம் மையங்கள் உள்ளன.

இதனால் தற்போது மக்கள் ஏடிஎம் மையங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பலரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை செய்து வருகின்றனர்.

எனினும் அனைத்து இடங்களிலும் அதனை பயன்படுத்த முடியாததால் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நன்மை கருதி பல்வேறு புதிய திட்டங்களையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்க வசதிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த வரிசையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பேங்க் ஆஃப் பரோடாவின் M-Connect Plus ஆப்பை வாடிக்கையாளர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் தினசரி 5,000 ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

அருகில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்துகொண்டால் இச்சேவையை பயன்படுத்தலாம்.

நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கின் பயன்படுத்தினால் நீங்களாகவே ஈசியாக மொபைலில் பதிவு செய்துகொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img