முட்புதரில் 12 வயது சிறுமியின் சடலம்: உடலெங்கும் கடித்து, கல்லால் அடித்து கொன்ற சிறுவனின் கொடூரம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murdered - 2026

எந்நேரமும் ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு ஆபாச படங்களுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான 17வயது சிறுவன் 6ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை கொடூரமாக கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வந்த 11சிறுமியின் தந்தை அதே பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். ஊரடங்கினால் வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்த அந்த சிறுமியை, மின் கட்டணம் செலுத்த சென்ற தாய் உடன் அழைத்து சென்றுள்ளார்.

மின்கட்டணம் செலுத்திவிட்டு திரும்பி வரும்போது, மகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கோழிக்கறி கடைக்கு சென்றிருக்கிறார் தாய்.

பின்னர் நெடு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த வீட்டில் மகள் இல்லாதை கண்டு தேடியிருக்கிறார். அதற்குள் அவரது கணவரும் வந்திருக்கிறார்.

murder 1 - 2026

எங்கு தேடியும் மகள் கிடைக்காத நிலையில் சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்த பொதுமக்களும் ஒரு பக்கம் தேடிவந்துள்ளனர். அப்போது சிறுமியின் வீட்டு அருகே உள்ள புதர்க்காட்டில் உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமியிடன் உடல் கிடந்திருக்கிறது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ நடந்த இடத்தில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் காட்டிய செல்போன் சிக்னலை வைத்து அந்த நம்பரை வைத்து தேடியதில் 17 வயது ஐஐடி மாணவன் சிக்கினான்.

முதலில் தனக்கும் சிறுமியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொன்ன சிறுவன், செல்போன் என்ணை காட்டி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறான். தனியாக வந்த சிறுமியை பேச்சுக்கொடுத்து புதர் பக்கம் அழைத்துவந்துவிட்டேன். சந்தோசமாக இருக்க முயற்சி செய்தேன். அதற்கு சிறுமி சம்மதிக்கவில்லை. அதனால் தலையில் கல்லால் அடித்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

தலையில் பலமாக அடிபட்ட சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்த அந்த கொடூர சிறுவன், சிறுமியின் உடலில் பல இடங்களில் கடித்து வைத்திருக்கிறான். உயிர் பிழைத்தால் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று முழுவதுமாக அடித்து கொலை செய்திருக்கிறான்.

Acoust - 2026

தற்போது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர், சிறுவன் செய்த கொடூரங்கள் என்னென்ன என்பதை ஆதாரப்பூர்வமாக வைத்து அவன் மீது மேலும் பல வழக்குகள் பதியப்படும் என்கிறனர் போலீசார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

பெற்றோர் இல்லாததால், உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த சிறுவன், கஞ்சாவுக்கும் ஆபாச படங்களுக்கும் அடிமையாகி இப்படி ஒருகாரியத்தை செய்திருப்பதாக சொல்கின்றனர் அப்பகுதியினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.