வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி தமிழ்நாட்டில் குடியேற்றம்!

Published:

Bangladesh caa - 2026

வங்க தேசத்தில் இருந்து பலர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் வந்து, பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் இதுபோன்று குடியேறுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது, தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மத்திய உளவுத் துறை மற்றும் சென்னை கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார் வங்கதேசத்தவரை தேடிவந்துள்ளனர்.

இதை கண்காணித்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று மதியம் பெரியகங்கணாங்குப்பத்தில் கற்பக விநாயகர் நகரில் வந்து விசாரித்தனர்.

அங்கு சந்தேகத்துக்கு இடமாக யாரேனும் வசிக்கிறார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசிப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.

அதன்படி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, விசாரணை மேற்கொண்டனர்.

Bangladesh - 2026

அதில், அங்கு 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 வயது சிறுவன் உள்பட 6 பேர் வசித்து வந்ததும், அவர்கள் அனைவரும் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

மேலும் விசாரணையில், நாஜ்மூர் ஷித்தர் (வயது 35), அவரது மனைவி பரீதாபீவி (25), 3 வயது சிறுவன் மற்றும் ஷக்தர் முல்லா (50), பாபுஷேக் (22) பாத்திமா பீவி (25) என்பதும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு குடியேறியதும் தெரியவந்தது.

சுமார் 2 மணி நேரமாக அங்கு விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், பின்னர் அவர்களை ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் நடத்திய சோதனையில் பல போலியான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டினருடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும், அவர்கள் அங்கு தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்த நபரையும் தேடி வருகின்றனர்.

அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்த போதிலும் அப்பகுதியில் யாரிடமும் பேசியதில்லையாம். வெளியிலும் வருவதில்லையாம். அதனால், அந்த தெருவில் உள்ள ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதே தெரியாது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

நாஜ்மூர் ஷித்தர்,ஷக்தர் முல்லா,பாபுஷேக் என்ற 3 இளைஞர்கள்( பாலியல் தொழில் ஏஜென்டுக்கள்) 2 பெண்களை வைத்து கொண்டு கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப்பட்ட பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த பகுதியிலிருந்து நாள்தோறும் இவர்கள் வெளியே சென்றுவிட்டு சந்தேகமாக வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் ரகசியமாக நடத்தப்பட்ட விசாரணையில் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை வைத்து கொண்டு 3 ஏஜென்டுகளும் பாண்டி உள்ளிட்ட பல பகுதிகளிக்கு அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுவது சம்பவம் கண்டறிந்தனர். விசாரணைக்கு பின்னர் 2 பெண்கள் மற்றும் 3 ஆண்களையும் கைது செய்தனர்

வங்கதேசத்தில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது எப்படி, ரெட்டிச்சாவடி பகுதிக்கு இவர்களை அழைத்து வந்தவர்கள் யார்?, அங்கு குடியேறியதற்கான காரணம் என்ன?, இவர்களை போன்று வேறு யாரேனும் கடலூர் மாவட்டத்தில் குடியேறி இருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே வேளையில், இங்கு வசித்து வந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்றும் கியூ பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் வங்கதேசத்தினர் போன்றவர்கள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இது போன்ற குற்றங்களும் தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களும் உரிய ஆவணமின்றி இந்திய நாட்டில் ஊடுருவி நம் நாட்டின் ரகசியங்களை பிற நாட்டிற்கு விற்றும் பெண்களை காதல் என்ற பெயரில் கடத்தி அடிமைகளாக அவர்கள் நாட்டில் அடைத்து கொடுமைப்படுத்தும் நிகழ்வும், இந்தியா நாட்டின் அமைதியை, இறையாண்மையை குறைப்பதற்கான சதியும், இந்திய அரசுக்கு எதிராக மக்களை திசை தருப்பும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

இவர்களை போன்றவர்களை அடையாளம் காணவும் நாட்டை காக்கவும், ஆபத்தான இவர்களிடமிருந்து மக்களை மீட்கவும் தான் குடியுரிமை சட்டம். கண்டிப்பாக இந்திய நாட்டின் மீது பற்றுள்ள, தேசபக்தியுள்ள எந்த குடிமகனும் அதனை ஆதரிப்பார்கள். இவ்வாறு தவறான வழியில் வந்தவர்களும், அவர்களுக்கு தஞ்சமளித்து துணைப் போவோர் மட்டுமே இதனை எதிர்ப்பார்கள். மக்கள் இச்சம்பவத்தின் மூலம் இதனை உணரத்தொடங்கியுள்ளனர்.‌ இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img