தினகரன் அலுவக எரிப்பு கைதி அட்டாக் பாண்டி மனு; சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவு!

Published:

madurai high court
madurai high court
  • தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு!
  • கைதி அட்டாக் பாண்டி தாயாரை பார்க்க 10 நாட்கள் அவசர விடுப்பு கோரி மனு!
  • சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள அட்டாக் பாண்டி, உடல் நலம் முடியாத தாயாரை பார்க்க 10 நாட்கள் அவசர விடுப்பு கோரி மனு விசாரணையில், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மனு தாரர் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் உத்தரவு.

சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் மனைவி தயாள் தாக்கல் செய்த மனு: அதில்,தினகரன் எரிப்பு வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அட்டாக் பாண்டி ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
தற்பொழுது, எனது கணவரின் தாயாரான ராமுத்தாய் உடல் நலம் முடியாமல் உள்ளார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

எனது கணவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவசர விடுப்பு வழங்க மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.

எனவே, தாயாரை பார்க்க வேண்டி எனது கணவரான பாண்டிக்கு 10 நாட்கள் அவசர விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி, அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு குறித்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் மனுதாரர் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்த உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26- ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.

Related articles

Recent articles

spot_img