தமிழக பாஜக., மாநில தலைவராக அண்ணாமலை நியமனம்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
annamalai - 2026

தமிழக பாஜக., மாநில தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

தமிழக பாஜக., மாநில துணைத் தலைவராக இருந்த கே.அண்ணாமலை, தமிழக பாஜக., தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். தமிழக பாஜக., தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சர் ஆன நிலையில், அந்தப் பொறுப்புக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை, பாஜக தலைமை அலுவலக பொறுப்பு பொது செயலாளர் அருண் சிங் வெளியிட்டிருக்கிறார்.

இதை அடுத்து, தமிழக பாஜக.,வினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

annamalai bjp president - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.