susaid
susaid

கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வங்கி ஊழியர், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் தட்ச்சன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகள் லாவண்யா(28). இவர் கோவையில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு, உறவுக்கார இளைஞருடன் நிச்சயிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், நேற்று லாவண்யா கையில் ஏற்பட்ட அலர்ஜிக்காக அதிளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறிது நேரத்திலேயே அவர் மயக்கமடைந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தந்தை ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending