mallika - 2026

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வீட்டினுள்ளே பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரிய குளத்தை சேர்ந்தவர் பாண்டிராஜன் (37). இவரது மனைவி மல்லிகா (34) இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வ.உ.சி வீதியில் வாடகை வீட்டில் குடி வந்தனர்.

பாண்டிராஜன் அருகில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா கணவர் பாண்டிராஜன் உடன் சேர்ந்து ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.

பாண்டிராஜன் வேலை செய்யும் ஹோட்டல் முதலாளிக்கு கொரானா தொற்று ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கடை திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் வேலை இல்லாமல் பாண்டிராஜன் இருந்து உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பாண்டிராஜன் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மனைவி தண்ணீர் வருகிறது என்பதை சொல்வதற்காக பாண்டிராஜன் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அப்போது உள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த வீட்டின் அவர் கதவை திறந்து பாரத்து போது கதவு பூட்டாமல் இருந்தது.

உள்ளே சென்று பார்த்த பொழுது மல்லிகா அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனே தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூர் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமால் , தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவைத்து சோதனை நடத்தினர்.

விசாரணையில் கணவர் பாண்டி நான்கு நாட்களுக்கு மேலாக வீட்டிற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. மனைவியை கணவர் பாண்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாரா? மேலும் பாண்டி வெளியில் சென்ற‌ நேரத்தில் வேறு யாராவது வந்து மல்லிகாவை கற்பழித்து கொலை செய்து சென்றனரா ? என்ற கோணத்தில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பெண் நிர்வாணமாக பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending