peacock - 2026

திருப்பூர் அருகே முத்தணம்பாளையம் – ஒத்தக்கடை கிராமத்தில் விவசாய நிலங்கள் அருகே, நேற்று முன்தினம், 24 மயில்கள் இறந்து கிடந்தன.

விஷம் தடவிய தானியங்களை உட்கொண்டதால் அவை இறந்து கிடந்தன. வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர்.

இறந்து கிடந்த மயில்களின்உடல் உள் உறுப்புகள் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்து அனுப்பி வைக்கப்பட்டன. அதே பகுதியில் நேற்று மேலும், மூன்று ஆண் மற்றும் எட்டு பெண் மயில்கள் என மொத்தம் 11 மயில்கள் இறந்து கிடந்தன.

இதனால், கூடுதல் வனப்பாதுகாவலர் அன்வர்தீன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம், உதவி இயக்குனர் கிருஷ்ணசாமி மற்றும் வனச்சரகர்கள் அடங்கிய குழுவினர் முன்னிலையில், மயில்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து, உள் உறுப்புகள் சேகரிக்கப்பட்டன.

யாரேனும் விஷம் வைத்ததால், மயில்கள் இறந்தனவா, என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து, தகவல் அறிந்தால், 88700 47676, 63977 41836, 75501 95814 என்ற எண்களில் தெரிவிக்குமாறு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending