hundial - 2026

கோவிலின் உண்டியலில் இருந்த பணத்தை திருட்டி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தா அபிமன்னன் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 14 – ஆம் தேதியன்று கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பின் மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து பூசாரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கே.கே நகர் புதிய காலனி பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலிலும் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

எனவே 2 கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending