robbery 1
robbery 1

மின்ஊழியர் வீட்டில் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அந்தோணியார் புரம் பகுதியில் ஜெபமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜெயமேரி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் ஜெயமேரி துணி எடுப்பத ற்கு தூத்துக்குடிக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

ஜெயமேரி தனது வீட்டிற்கு திரும்பிய போது முன்பகுதியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து ஜெயமேரி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அவ்வழியாக சென்ற இளைஞர் மற்றும் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் அர்னால்டு என்பதும், அவர்கள் இரண்டு பேரும் இணைந்து மின்வாரிய ஊழியர் வீட்டில் 9 பவுன் நகையை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் திருடிச் சென்ற 9 பவுன் நகையை மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிய குற்றத்திற்காக அர்னால்டு மற்றும் சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending