vankodumai 1 - 2026

ஆன்லைன் வகுப்பில் தீவிரமாக இருந்த பக்கத்து வீட்டு +2 மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞரை தனிப்படை அமைத்து தேடி வருகிறது போலீஸ்.

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரில் வசித்து வரும் ஜோதி(24) என்ற இளைஞர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவுப்பெண் மீது குறியாக இருந்திருக்கிறார். +2 படித்து வந்த அந்த சிறுமி, ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார்.

எந்நேரமும் சிறுமி வீட்டிலேயே இருந்ததை சாதகமாக்கிக்கொண்டு சிறுமியின் பெற்றோர் வெளியே செல்லும் நேரம் எல்லாம் அந்த சிறுமியிடம் காதல் வார்த்தைகள் வீசி வந்திருக்கிறார்.

கல்யாணம் செய்துகொண்டால் உன்னைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

ஜோதியின் இந்த ஆசை வார்த்தைகளை நம்பி சிறுமியும் பாடத்தில் கவனம் இழந்து ஜோதியின் மேல் காதல் கொண்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி அதை தடுத்தபோதும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் சில மாதங்கள் இருந்த சிறுமி, பின்னர் தனது கர்ப்பத்தை பெற்றோரிடம் மறைத்து வந்திருக்கிறார்.

தற்போது வயிறு பெரிதாக ஆகிவிட்டதால் சிறுமியால் கர்ப்பத்தை மறைக்க முடியவில்லை. பெற்றோரிடம் உண்மையை சொல்லி அழுதிருக்கிறார்.

இதையடுத்து ஜோதி மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் லதா, ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை கைது செய்ய வந்தபோது, விபரம் அறிந்து ஜோதி தலைமறைவாகிவிட்டார். இதனால் தனிப்படை அமைத்து ஜோதியை தேடி வருகின்றனர் போலீசார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending