2 வயது மூத்த பெண்ணை காதலித்து மணந்த இளைஞர்! நிதமும் பிரச்சினை.. மனைவி தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
maharani1
maharani1

தன்னைவிட வயதில் இரண்டு வயது குறைந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த கதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவில்பட்டி அடுத்த திப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் செண்பகராஜ். இவர் கடலையூரைச் சேர்ந்த மகாராணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். எட்டயபுரம் அடுத்த இளம்புவனத்தில் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த செண்பகராஜ், கடலையூர் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தபோது அங்கு வேலை பார்த்த மகாராணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

maharani selvaraj
maharani selvaraj

இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்ததால் இது சரிப்பட்டு வராது என்று அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். செண்பராஜ்க்கு 24 வயது. மகாராணிக்கு 26வயது. ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த மகாராணிக்கும் செண்பகராக்கும் முத்துசாமியும் மாடத்தியும் சொன்னதை கேட்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். பெற்றோர்களுக்கு இது தெரிந்தாலும் அவர்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

திருமணம் செய்த பின்னர் தான் செண்பகராஜ்க்கு அந்த சிக்கல் வந்திருக்கிறது. நண்பர்கள் பலரும், அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என எல்லோரும் செண்பகராஜ்க்கும் மகாராணிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது. வாக்குவாதம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. இதை தனது தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார் மகாராணி.

இதையடுத்து இருவரையும் கடலையூர் வந்து தங்களுக்கு சொந்தமான வீட்டிலேயே தங்கி இருக்கும்படி சொல்லி இருக்கிறார். இதை செண்பக ராஜியிடம் சொல்லியிருக்கிறார் மகாராணி. அதற்கு செண்பகராஜ் ஒத்துக்கொள்ளாமல் சண்டை போட்டிருக்கிறார்.

naharani
naharani

இந்த நிலையில் திப்பனூத்தூர் கிராமத்தில் திருவிழா வந்திருக்கிறது. மகாராணி வீட்டில் தனியாக இருந்தாலும் செண்பகராஜ் மட்டும் திருவிழாவுக்கு சென்றிருக்கிறார். திருவிழா முடிந்து வீடு திரும்பிய ஷெண்பகராஜ் மதுபோதையில் வந்திருக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மகாராணி கண்டபடி திட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் செண்பகராஜ்.

வெளியே சென்று வெகு நேரம் கழித்து வீடு திரும்பியபோது மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதிருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து எட்டையபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகாராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு செண்பகராஜி நடத்திவந்தனர்.

இதற்கிடையில் தகவல் கிடைத்ததும் பதறியடித்து ஓடிவந்த மகாரணியின் பெற்றோர் முத்துசாமியும் மாடத்தியும் தன் மகளின் மரணத்திற்கு காரணம் செண்பகராஜ் தான் என்று சொன்னதும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர் போலீசார்.

திருமணமான ஒருவருடத்தில் இளம்பெண் உயிரிழந்து இருப்பதால் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.