dead body
dead body

பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல் இருந்து வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பாக்கியலட்சுமி என்று மனைவியும், மதுமிதா (20), மலைராஜா என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர்.

மதுமிதா தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ஆறுமுகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதனால் பாக்கியலட்சுமி, மேக்கூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், தந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மதுமிதா, அவர் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் காலை, மதிய என 2 வேளையும் உணவு சாப்பிடவில்லை. மதியம் வீட்டில் படுத்து தூங்கிய மாணவி மாலை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இதனால் சந்தேகமடைந்த பாக்கியலட்சுமி மதுமிதாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மதுமிதாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending