deadbody
deadbody

வெள்ளகோவில் அடுத்த, கே.வி., பழனிசாமி நகரில் வசிப்பவர், மாதேஸ்வரன், 49; திருநங்கை ஆனந்தி,40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

வீட்டில் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை அருகில் வசிப்போர் பார்த்துள்ளனர்.வெள்ளகோவில் போலீசார், அங்கு வந்து விசாரித்தனர். ஆனந்தி இறந்தது தெரியவந்தது.

போலீசார் கூறுகையில், ”சில தினங்களாக, ஆனந்திக்கு, வயிற்றுப்பிரச்னை ஏற்பட்டது. மாதேஸ்வரன் கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆனந்தி இறந்ததாக மாதேஸ்வரன் சொல்கிறார். ஆனந்தியின் நிலை கண்டு, மாதேஸ்வரன், பிளே டால் கையை அறுத்துக்கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே, நடந்தது என்ன என்பது உறுதியாக தெரியவரும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending