கிரிக்கெட் மைதானத்தில் பந்தை தாவிப் பிடித்த நாய்! வைரல்!

cricket
cricket

அயர்லாந்து கிரிக்கெட் கிளப் போட்டி ஒன்றில் நடைபெற்ற சம்பவம் உலக அளவில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் போலவே உலகம் முழுக்க பல கிளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அயர்லாந்தில் பெண்களுக்கான கிளப் அணிகள் நிறைய உருவாக்கப்பட்டு டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அயர்லாந்தில் நடந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த டி 20 போட்டிகள் ஆல் அயர்லாந்து டி 20 கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு நாட்களுக்கு முன் பிரெடி கிரிக்கெட் கிளப் மற்றும் சிவில் சர்வீஸ் நார்த் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது.

dog
dog

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் அத்தனை விறுவிறுப்பாக செல்லவில்லை. உண்மையில் ஆட்டம் சூடு பிடித்ததே இரண்டாவது இன்னிங்சில்தான். காரணம் அங்கு மைதானத்திற்குள் வந்த நாய் குட்டி ஒன்று. பார்வையாளர் கூட்டி வந்திருந்த நாய் குட்டி ஒன்று அங்கு ஆட்டம் நடக்கும் போது மைதானத்திற்குள் நுழைந்தது.

போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு போது நாய் குட்டி ஒன்று உள்ளே வந்தது. பேட்ஸ்வுமன் ரன் அடித்துவிட்டு ஓடும் போது உள்ளே வந்த நாய் குட்டி, கீப்பர் தூக்கி வீசிய ஓவர் த்ரோ பந்தை பிடித்து அப்படியே மைதானத்தை சுற்ற தொடங்கியது.பொதுவாகவே நாய் குட்டிகள் பந்தை பிடித்தாலே அதை தூக்கிக்கொண்டு ஓடுவது வழக்கம்.

cricket 1
cricket 1

அதேபோல் அந்த நாயும் பந்தை பிடித்துவிட்டு வாயில் வைத்துக்கொண்டு மைதானம் முழுக்க சுற்றியது. இந்த நாயை பிடிக்க வீராங்கனைகள் அதன் பின்னாடியே ஓடினார்கள். ஆனால் அந்த நாய் நிற்கவில்லை. இதனால் புத்திசாலித்தனமாக யோசித்த பேட்ஸ்வுமன் கீழே உட்கார்ந்து அந்த நாயை அருகில் அழைத்தார். அந்த நாயும் நல்ல பிள்ளையாக அவரை நோக்கி சென்று.. சரியாக பந்தை அவரிடம் கொடுத்தது.

இந்த க்யூட் வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. இந்த அழகான சம்பவம் நெட்டிசன்கள் இடையே டிரெண்ட் ஆனது. பல கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கிரிக்கெட்டில் இப்படி எல்லாம் அழகான விஷயங்கள் நடக்குமா.. பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

dog
dog

இந்த நிலையில் அந்த நாய் குட்டிக்கு சிறப்பு பரிசு வழங்கி உள்ளது. மாத மாதம் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் கிரிக்கெட் உலகில் சிறந்த நாய் என்றும் சிறந்த பில்டர் என்றும் விருது வழங்கி உள்ளது. இப்படி ஒரு பிரிவு கிடையாது என்றாலும் அந்த நாய் குட்டிக்காக சிறப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி விருது வழங்கி உள்ளனர். ஐசிசியும் அந்த நாயை கொண்டாடி விருது வழங்கியது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories