மோகன்லால் கொடுத்த பரிசு! உச்சி குளிர்ந்த உச்ச நடிகர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
mohanlal
mohanlal

நடிகர் மோகன் லால் பிரபல நடிகருக்கு சன் கிளாஸ் பரிசளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் ஐகான் நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன் லால். மலையாள சினிமாவின் சூப்பர் நடிகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் மோகன் லால், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 9 முறை கேரள அரசின் விருதுகளையும் பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம விருதுகளை வழங்கியும் கவுரவித்துள்ளது. நடிகர் மோகன் லால் இதுவரை 340க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் வயது வித்தியாசம் இன்றியும் மொழி பாகுபாடு இன்றியும் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
prithvi
prithvi

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் லால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வரும் மோகன்லால், சாதிக்கும் சக நட்சத்திரங்களை பாராட்டவும் தவறுவதில்லை. சினிமாவை பொறுத்தவரை தன்னைவிட வயதில் சிறியவர்களுடனும் கூட நல்ல நட்பை பாராட்டி வருகிறார் நடிகர் மோகன்லால்.

சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட பிரித்விராஜ் சுகுமாரன் இடையே நல்ல உறவு உள்ளது. மோகன்லாலுக்கு பிருத்விராஜை குழந்தைப்பருவ நாட்களிலிருந்து தெரியும், அவர்களின் உறவு பல வருடங்களாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்திற்குப் பிறகு அவர்களின் இந்த நட்பு இன்னும் நெருக்கமாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் சமீபத்தில் பிரித்விராஜுக்கு பரிசு ஒன்றை கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் நடிகர் காஸ்ட்லியான சன்கிளாஸை பரிசளித்துள்ளார்.

mohanlal 1
mohanlal 1

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பிரித்விராஜ் “குரேஷி அப்ராம் உங்களுக்கு சிறந்த பரிசுகளை வழங்கும்போது! நன்றி சேட்டா! என மோகன்லாலின் இன்ஸ்டா ஹேண்டிலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மேலும் பிரித்விராஜ் சுகுமாரன் மோகன்லால் தனக்கு பரிசாக கொடுத்த சன் கிளாஸின் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

eye glass
eye glass

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த கண்ணாடியின் விலை எவ்வளவு இருக்கும் என யூகிக்கத் தொடங்கினர். இந்த சன் கிளாஸின் விலை சுமார் ரூ. 1.5 லட்சம். என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் சமீபத்தில் ‘ப்ரோ டாடி’ படப்பிடிப்பில் இருந்தனர். இந்த படம் பிரித்விராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகம் இரண்டாவது படமாகும்.

இந்த படத்தில் மீனா, லாலு அலெக்ஸ், கல்யாணி பிரியதர்ஷன், கனிஹா மற்றும் சவுபின் ஷாஹிர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனிடையே ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் புதன்கிழமை இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இடுக்கியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.