
ஒரிசாவில் வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில் ஒரு பெண் வாடிக்கையாளர் ஆடைகளை மாற்ற சென்ற போது அதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த பெண் வாடிக்கையாளர், ஆடை மாற்று அறைக்கு சென்ற போது அந்த அறையின் மேல் ஒரு ஸ்மார்ட்போனைக் கவனித்ததாகவும், அவர் வாங்க விரும்பும் புதிய துணியை மாற்றி பார்க்க முயற்சிக்கும்போது அதன் கேமரா அந்த பெண்ணை நோக்கிச் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து அந்த பெண் சுதாரித்து கொண்டு மாலில் அங்கு இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இதை கூறியுள்ளார். மேலும் மால் ஊழியர்களிடம் தகவல் கொடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது இளைஞர் ஒருவன் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் இதே போன்று பலமுறை வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அந்த இளைஞரை விசாரணை செய்து வருகின்றனர்.