
இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்லாத தி.மு.கவினர் கோவிலுக்கு ஏன் வர வேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ மனோஜ் தங்கராஜை கோவிலுக்குள் நுழைய விடாமல் மக்கள் விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சக்திவினாயகர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அப்பகுதி மக்களும் கோவில் நிர்வாகமும் இணைந்து திருவிழாவை திட்டமிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வந்த பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மனோ தங்கராஜை கோவிலுக்குள் நுழைய விடாமல் வாசலிலேயே வைத்து பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தி.மு.க உறுப்பினர்கள் 50 பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்குள் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதாக தெரிவித்து உள்ளே நுழைய முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் வேற்று மதத்தினரை கோவிலுக்குள் நுழைய விடமாட்டோம் என்றும் அதேபோல் இந்து கடவுள்களை தொடர்ந்து இழிவாகப் பேசி வரும் கட்சியை சேர்ந்தவரை எவ்வாறு கோவிலுக்குள் நுழைய விட முடியும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு கோவிலுக்குள் தி.மு.கவினர் நுழைய முற்பட்டதால் கோவிலின் கேட்டை இழுத்து மூடி அனைவரையும் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எம்.எல்.ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரையும் அவருடன் வந்தவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தி.மு.க எம்.எல்.ஏவை கோவிலுக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் இந்து பண்டிகையே அல்ல என்றும் தமிழர் பண்டிகை என்றும் கூறுபவர்கள் பொங்கல் வைக்க மட்டும் கோவிலுக்கு வருவதா என்று மக்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.