நடிகை சமந்தா – நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக தெரிவித்த பின்னர், சமந்தாவின் முன்னாள் காதலரும், கோலிவுட் நடிகருமான சித்தார்த் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு, சமந்தாவை குறிவைத்து போட்டுள்ளதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்த தகவல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமந்தா – நாக சைதன்யா இருவருமே ஒரே சமயத்தில் தங்களுடைய பிரிவு குறித்து சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர்.
சுமார் 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதி, திடீர் என தங்களது பிரிவு குறித்து தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அதே நேரத்தில், விவாகரத்து குறித்த தகவல் தீயாக பரவி வந்த நிலையில், நீண்ட மௌனத்திற்கு பின் இருவருமே வாய் திறந்தது, உண்மையை உடைத்து, பலரது குழப்பங்களுக்கும் விடை கிடைத்தது போல் அமைந்தது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த், சமந்தா விவாகரத்து குறித்து அறிவித்த பின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு, சமந்தாவை குறிவைத்து போடப்பட்டதா? சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சமந்தா – நாக சைதன்யா இருவரும், டேட்டிங் செய்வதற்கு முன் சமந்தா, பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் சில நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தோன்றினர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், “பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில், ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சித்தார்த்தின் குறிப்பிட்ட இந்த பதிவு… எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்… நடிகை சமந்தாவை குறிவைத்து சித்தார்த் கூறியுள்ளாரா? என பலர் கேள்வி எழுப்பி வருவதோடு தங்களது கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
One of the first lessons I learnt from a teacher in school…
— Siddharth (@Actor_Siddharth) October 2, 2021
"Cheaters never prosper."
What's yours?