கோவிலின் மீது மின்னல் தாக்கியதால் கோபுரம் சேதம் அடைந்து கீழே விழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்தடையை ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்பின் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.
இதனை அடுத்து சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருக்கும் கோபுரத்தின் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்னலானது தாக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் கோவில் கோபுரம் சேதமடைந்தது மட்டுமின்றி அதில் இருந்த பொம்மைகள் உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது கோவிலில் இருந்த ஐம்பதிற்கும் அதிகமான பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதற்கு பிறகு கோவிலில் மின்தடை ஏற்பட்ட நிலையை பக்தர்களை பாதுகாப்பான முறையில் வெளியேற்றினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, ராஜகோபுரத்தை நோக்கி வந்த மின்னலானது அங்கு தாக்காமல் முருகன் சன்னதில் இருக்கின்ற கோபுரத்தைத் சேதப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து முருகன் தான் பக்தர்களை காப்பாற்றியிருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது போன்று அடிக்கடி நிகழ்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவில்களுக்கும் இந்து மக்களுக்கும் எதிராக நடைப்பெறுகின்ற சம்பவங்களும், கோவிலில் பக்தர்கள் தடை, விழா, பண்டிகைகள் தடை, நகைகளை மாற்றுதல், போன்ற மாறுபட்ட நடவடிக்கைகள்.., இம்மாதிரியான துர்நிமித்தம் ஆகியன பீதியை ஏற்படுத்தியுள்ளது.