spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சினேகாவுக்கு பிறந்த நாள்: வைரலான பிரசன்னா வாழ்த்து!

சினேகாவுக்கு பிறந்த நாள்: வைரலான பிரசன்னா வாழ்த்து!

- Advertisement -
prasanna
prasanna

புன்னகை இளவரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர் சினேகா.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கடந்த 20 ஆண்டுகளாக பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து வருபவர்.

தனது அழகிய புன்னகையாலும், க்யூட்டான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, 2000 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்ஙனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் 2001 ம் ஆண்டு கோபிசந்திற்கு ஜோடியாக தோளி வளப்பு என்ற படத்தில் நடித்தார்.

prasanna sneka 2
prasanna sneka 2

தமிழில் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே படத்தில் நடித்து, கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனார். பிறகு கமல், விஜய், நாகர்ஜுனா, வெங்கடேஷ், பிரசாந்த், தனுஷ், சிலம்பரசன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின் ஆனார். தென்னிந்திய மொழி ரசிகர்களை கவர்ந்து, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

prasanna sneka
prasanna sneka

2009 ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது பிரசன்னாவை சந்தித்தார் சினேகா. காதலில் விழுந்த இருவரும் 2012 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2015 ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இவருக்கு விஹான் பிரசன்னா எனப் பெயரிட்டனர். தொடர்ந்து 2020 ல் பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆத்யந்தா என பெயரிட்டனர்.

prasanna fmly
prasanna fmly

இந்நிலையில் நேற்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு செம ஸ்டையில் லுக்கில் போஸ் கொடுத்த சினேகாவின் ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிரசன்னா, ஹேப்பி பர்த்டே கண்ணம்மா. இதே பளிச் சென்ற, அழகி புன்னகையுடன் எப்போதும் இருக்க வேண்டும். எப்போதும் என் உலகின் ராணியாக இரு. எனக்கு தெரிந்த மிக அழகான உயிர் நீ. ஐ லவ் யூ 3000 என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

sneka
sneka

இதை பார்த்து விட்டு பலரும் பாராட்டி உள்ளனர். ஏராளமானோர் லைக் செய்து, பிரசன்னாவின் இந்த பதிவை வைரலாக்கி உள்ளனர். பெண் ரசிகைகள் பலர் சினேகாவை பிரசன்னா என்னம்மா வாழ்த்தி இருக்கார் என பொறாமைப்படும் தோணியில் கமெண்ட் செய்துள்ளனர்.

சினேகாவிற்கு ஆண்டுக்கு ஆண்டு வயது ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என ஏராளமானோர் கேட்டுள்ளனர்.

prasanna 1
prasanna 1

சினேகா கடைசியாக தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் நடித்தார். இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

அடுத்ததாக ஆர்ஏ கார்த்திக் எழுதி இயக்கும் வான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷினி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,170FansLike
387FollowersFollow
92FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,300SubscribersSubscribe