
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தி அடைய இசைஞானி இளையராஜா மோட்சதீபம் ஏற்றி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்து திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது என்று அனைவரும் குமுறி வருகின்றனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி உள்ளார்.
கடந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தி அடைவதற்காக திருவண்ணாமலையில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றியதும் குறிப்பிடதக்கது.
#NikilNews23
— Nikil Murukan (@onlynikil) October 31, 2021
மறைந்த நடிகர் #PunneethRajkumar @PuneethRajkumar ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றினார்#Maestro #ilayaraja pic.twitter.com/ZfoOG5RvLH