Missile - 2026

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை: சோதனை வெற்றி!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Missile - 2026

இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் (INS Vishakhapatnam) இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் பரிசோதனை செய்தது.

ஏவுகணை துல்லியமாக ஒரு கப்பலை குறிவைத்து அழித்தது. ஜனவரி 12 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீனா இடையே 14 வது சுற்று பேச்சுவார்த்தையில் பதற்றத்தை குறைப்பது குறித்து பேசப்படும் நிலையில், இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றுள்ளது.

முன்னதாக, டிசம்பர் 8 ஆம் தேதி, வான் எல்லையை தாக்கவல்ல சூப்பர்சோனிக் ஏவுகணை பிரம்மோஸ் ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாட்டில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. சுகோய் 30 Mk-I என்ற சூப்பர்சோனிக் போர் விமானத்தில் இருந்து வானிலிருந்து தாக்க வல்ல ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

பிரம்மோஸ் ஏவுகணை ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டமாக தயாரிக்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கை சென்று தாக்குதல் பெயர் பெற்றது.

சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மிக வேகமாக தாக்கும். இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பல், கப்பல் அல்லது விமானத்தில் இருந்து ஏவலாம். பிரம்மோஸின் வரம்பையும் அதிகரிக்கலாம். இது தவிர எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.