அறந்தாங்கியில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published:

அறந்தாங்கி

அறந்தாங்கியில் அனைத்திந்திய  இளைஞர் பெருமன்ற ஒன்றிய நகரம் சார்பில் தமிழக அரசின்  பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி அரசை கண்டித்து அறந்தாங்கி பஸ் ஸ்டாணட் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வகித்தார். ஒன்றிய துணை தலைவர் வீராசாமி பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்  இராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். போராட்டம் குறி்த்து முன்னாள் மாவட்ட தலைவர்  தண்டபாணி   ஒன்றிய செயலாளர்   முத்துசாமி ஆவூடையார் கோவில் ஒன்றிய செயலாளர்  கனேசன் ஆகியோர் பேசினர்.

போராட்டத்தை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இளங்கோவன் முருகன் ஆகியோர்  போராட்டத்தை முடித்து வைத்தனர் இந்த  ஆர்ப்பாட்டத்தில்  இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள்  ராசு  அழகுமன்னன்  பாலசுப்பிரமணியன்   சித்ரவேல்   சத்தியமூர்த்தி போஸ்   தமிழ்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img