தமிழகத்தில் நேற்று மாலையில் இருந்து அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் பேருந்துகளில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏழை எளிய மக்களுக்கு பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் இடைநில்லா பேரூந்தில் 38 ரூபாய் இருந்த கட்டணம் தற்போது 62 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் பேரூந்தில் பயணம் செய்யும் திருநெல்வேலி, மதுரை செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் . தொடர் வண்டியில் குறைவான கட்டணம் என்பதால் தொடர் வண்டியில் பயணம் செய்ய மக்கள் கிளம்பியதால் தென்காசி புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த கட்டணம் அதிகரிப்பு மேலும் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திவரும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கிறது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்