10 நிமிட தாமதத்துக்காக ‘வாத்து நடை’ தண்டனை; மாணவன் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!

 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டி போட்டு நடந்து செல்லும் தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை முடிந்து நேற்று தாமதமாக வந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து போல முட்டி போட்டு செல்லும் தண்டனை கொடுத்துள்ளார். இதில் 10-ம் வகுப்பு படிக்கும் நரேந்தர் என்ற மாணவன் முட்டி போட்டு சிறிது நேரம் சென்ற நிலையில், மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் மாணவனை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை ஸ்டாலின் மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் நரேந்தர் பரிதாபமாக இறந்துபோனான்.
காலை 10 மணிக்கு நரேந்தரின் தந்தை முரளிக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன் செய்து, மாணவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தனர். பள்ளிக்கு பரபரக்கச் சென்ற முரளியிடம் ‘மாணவனின் இறப்பு இயற்கையானது’ என்று கையொப்பம் வாங்கியுள்ளனர்.
பலியான மாணவனின் பெற்றோரிடம் சக மாணவர்கள் நடந்த சம்பவத்தைக் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை நேற்று இரவு முற்றுகையிட்டனர். பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவன் வாத்து போல முட்டி போட்டுச் சென்று மயங்கி விழுவதும் பின்னர், ஆட்டோவில் எடுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் பலிக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories