அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே சிலட்டூரில் எம்ஜிஆர் 101 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது கூட்டத்திற்கு அவை தலைவர் திருஞாணம் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் அறந்தாங்கி வேலாயுதம் திருவரங்குளம் துரைதனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர ;சந்திரமோகன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்டசெயலாளர் வைரமுத்து தலைமைகழக பேச்சாளர் ஆண்டிமுத்து சேகர் ஆகியோர் பேசினர்.அதனை தொடர்ந்து நடந்த பொதுகூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
முன்னாள் எம்எல்ஏ அரசன்,ஞானகலைச்செல்வன்,ரெங்கையன்,பாலகிருஷ்ணன்,ஆத்மநாதன்,குமரேசன்,அப்பாவு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் 600 பேர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.



