நாட்டின் சாதனையாளர்களுக்கு … பத்ம விருதுகள் அறிவிப்பு!

Published:

padma awards - 2026

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள், நாட்டுக்காக சிறந்த முறையில் பணியாற்றியவர்கள் என 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் சார்பில், தமிழறிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், மூத்த தமிழ் நடிகை சௌக்கார் ஜானகி உள்ளிட்டோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்தது.

மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்…

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர், முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங், மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், பிரபா அட்ரே (மஹாராஷ்டிரா) கலை, ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவனம்) , சத்ய நாதெல்லா காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இவர்களுடன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related articles

Recent articles

spot_img