தியானத்தில் இருப்பது அவர் கடமை; எழுந்து நிற்பது என் கடமை: கமலின் விளக்கம்!

சற்றுமுன் சென்னை

சென்னை:

தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப் படும் போது தியானத்தில் இருப்பது அவர் கடமை, எழுந்து நிற்பது என் கடமை என்று விளக்கம் கூறி ஆச்சரியப் படுத்தினார் நடிகர் கமலஹாசன்.

தனது அரசியல் பயணத் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், நாளை நமதே! என்பது எனக்கு உடனடியாகத் தோன்றியது என்று கூறி, தனது பயணத் திட்டத்தை விளக்கினார்.

அப்போது, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிகள் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்தது குறித்த சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தியானத்தில் இருப்பது அவர் கடமை, எழுந்து நிற்பது என் கடமை. அவரவர் கடமையை அவரவர் செய்ய வேண்டும். பொதுவாக, தமிழ்த் தாய் வாழ்த்து போன்றவற்றை இது போன்ற இடங்களில் இசைக்காமல் இருப்பது நல்லது. திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப் பட வேண்டும் என்ற உத்தரவு வந்தபோது இப்படித்தான் ஆனது. எது எதற்கு அனைவரும் எந்த இடத்தில் மரியாதை கொடுக்கிறார்கள் என்பது ஒரு விஷயம்…. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.