
பனிப்பொழிவு காரணமாக சீனா ஏர்லைன்ஸின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.
சீனாவுக்கு சொந்தமான C15240 சரக்கு விமானம் அந்த ஊர் நேரப்படி நேற்று அதிகாலை 5.10 அலாஸ்காவின் ஆங்கரேஜில் இருந்து சிகாகோவில் தரையிறங்கியது. அப்போது கடுமையாக பனி பொழிந்துகொண்டிருந்தது.
தரையிறங்கியுவடன் விமானி விமானத்தை திருப்ப முயற்சி செய்ய, விமானத்தின் ஒரு பகுதி அங்கிருந்த பேக்கேஸ் கார்ட்டுகளின்மீது மோதியது.
இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதேசமயம், விமானத்தின் இடதுபுற எஞ்சின் ஒன்று மோசமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.
This is #Chinese Plane being driven by Chinese Pilot. #China Airlines Boeing 747 was damaged at #Chicago Airport after landing on Jan 29 #ChinaAirlines #USA #Accident @kakar_harsha pic.twitter.com/epPg4umLjM
— Sunaina Bhola (@sunaina_bhola) January 31, 2022