baby - 2026

வாட்டர் பாட்டிலை நிற்க வைத்த குட்டி.. அட என்ன ரியாக்ஷன் பாருங்க..!

சற்றுமுன் அடடே... அப்படியா?
baby - 2026

ஒரு குட்டியின் கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டை சொர்க்கம் என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைகள் எல்லாம் பறந்து போகும்.

அவர்களின் சிரிப்பு மற்றும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு குழந்தைகளின் உலகமே பொதுவாக குதூகலமானது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், 9 மாதங்களே ஆன குழந்தை ஒன்று அதன் அப்பா கூட விளையாடி கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் அப்பா குழந்தையின் அருகே ஒரு தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட்டு விளையாடுகிறார்.

உடனே அந்த குழந்தையும் அப்பா செய்வது போல் நாமும் செய்வோம் என நினைத்து, அந்த குழந்தையும் திரும்பி அந்தத் தண்ணீர் பாட்டிலை தூக்கி போட அந்த பாட்டில் எதிர்பாராதவிதமாக நாம் பெரியவர்கள் பாட்டிலை சாதாரணமாக வைப்பது போல் நேரே நிற்கிறது.

இதைப் பார்த்த அந்த குழந்தை சந்தோஷத்தில் கொடுக்கும் ரியாக்சனை நீங்களே பாருங்கள். இந்த குழந்தையின் கியூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.