Calf - 2026

கன்றுக்குட்டியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து வெளியீடு: தலிம், ஜூபைர், வாரிஸ், சுனா கைது!

சற்றுமுன் இந்தியா கிரைம் நியூஸ்
Calf - 2026

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 காமகொடூரன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பகுதியில் தலிம், ஜூபைர், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய 4 நபர்கள் சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை கொடூரமாக அடித்து, பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20-22 வயதுக்குட்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வார் மாவட்டம் திஜாராவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.