கிடுகிடு என்று மலையேறும் பாட்டி! வைரல்!

nagarathnama - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு 62 வயது மூதாட்டியினுடையது. இவர் தோட்டாவின் வேகத்தில் மலை ஏறுவதை வீடியோவில் காண முடிகின்றது.

பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.

தினசரி பணிகளை செய்வதற்கே இளைஞர்களுக்கு சோம்பேறித்தனம் வரும் இந்நாட்களில் இந்த பாட்டியின் வேகமும் சுறுசுறுப்பும் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றது.

ஆச்சரியமளிக்கும் இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதை லைக் செய்துள்ளனர்.

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், மலை உச்சியில் ஒரு ஆணும், கீழே பாட்டியும் நிற்பதைக் காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பாட்டி, கயிற்றின் உதவியுடன் கிடுகிடுவென மலை ஏறுகிறார்.

பாட்டி மலை ஏறுவதைப் பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயதானதே தெரியவில்லை. இளைஞர்களுக்கான சுறுசுறுப்புடன் அவர் மலை ஏறுகிறார்.

இந்த வீடியோ பிப்ரவரி 16-ம் அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெங்களூருவை சேர்ந்த அந்த பாட்டி தனது மகன் மற்றும் அவர்களது நண்பர்களுடன் கேரளாவில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் உச்சியில் ஏறுவதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என தெரியவந்துள்ளது.

வெற்றிகரமாக ஏறிய பிறகு, கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் குடும்பப் பொறுப்பில் பிஸியாக இருந்ததாக பாட்டி கூறினார். தற்போது தனது மகன்கள் வளர்ந்து செட்டில் ஆகி விட்டதால், இனி தனது கனவுகளை நிறைவேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாட்டி ஏறி முடித்த மலை 1868 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, இது படு சூப்பராக இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

நெட்டிசன்களும் பாட்டியை பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Timeofkarnataka என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories